»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பல புதிய படங்களை ஒப்புக் கொண்டுள்ள சிம்ரன் தனது கல்யாண ஐடியாவையும் தள்ளிப் போட்டு விட்டாராம். இதனால் ராஜு சுந்தரம் செம கடுப்பில்இருக்கிறார்.

பம்மல் கே. சம்பந்தம் சிம்ரனுக்கு புதிய தெம்பைக் கொடுத்து விட்டது. அந்தப் படத்தில் கமல்ஹாசனுக்கு இணையாக அதிகம்பேசப்பட்டவர் சிம்ரன். கன்னத்தில் முத்தமிட்டாலும் சிம்ரனுக்கு பெரும் பெயரைக் கொடுத்துள்ளது. இதனால் கல்யாண ஐடியாவைதற்போதைக்கு ஒத்தி வைத்து விட்டாராம் சிம்ரன். புதிதாக நிறைய படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

கமல்ஹாசனின் பஞ்ச தந்திரத்திலும் சிம்ரனுக்கு அட்டகாசமான கேரக்டர் தந்திருக்கிறார் கமல். இந்தப் படம் வெளியானால் சிம்ரன் மீண்டும்நம்பர் ஒன் இடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியிடம் பேசி பாபா படத்தில் சிம்ரனுக்கு வாய்ப்பு கூட வாங்கித்தந்திருக்கிறார் கமல்.

இதனால் கமல்-சிம்ரனை இணைத்து கிசுகிசுக்கள் கசிய ஆரம்பித்திருக்கின்றன. கமலைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் சிம்ரன்என்ற வதந்தி வேறு கிளம்பியுள்ளது. ஆனால் இதை சிம்ரன் மறுத்துள்ளார். கமல் அமைதி காக்கிறார். இருவருக்கும் ஒரு அண்டர்ஸ்டான்டிங்வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள் கோடம்பாக்கம் குருவிகள்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் ராஜூவை சிம்ரன் ஒதுக்க ஆரம்பித்துவிட்டது மட்டும் நூறு சதவீதம் உண்மை. சிம்ரனின் சமீபத்திய போக்குகள்அவரது காதலர் ராஜு சுந்தரத்திற்கு பெரும் குழப்பத்தையும், கடுப்பையும் ஏற்படுத்தியுள்ளதாம். என்ன செய்யலாம் என்று கையைப்பிசைந்து கொண்டுள்ள ராஜூ கமல் மீதும் பெரும் கோபமாக உள்ளதாகத் தெரிகிறது.

அவரும் (கமல்)டான்ஸ் மாஸ்டராக இருந்து ஹீரோவானவர். இவரும் (ராஜூ சுந்தரம்) டான்ஸ் மாஸ்டராக இருந்து ஹீரோ ஆகப்போகிறவர் (ஐ லவ் யூ டா படம் மூலம்...).

இருவருக்கும் இந்த ஒற்றுமை போதாதா... சிம்ரன் வரைக்கும் இந்த ஒற்றுமை தொடர வேண்டுமா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil