twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்ரீதேவி போல வர சுபாவுக்கு ரொம்ப ஆசை நடிப்புக்கு நடிப்பு, கிளாமருக்கு கிளாமர் என்று கலக்கிய ஸ்ரீதேவி போல நானும் வர ஆசை என்கிறார் "மச்சி புகழ் சுபா புஞ்ஜா."மச்சி படம் மூலம் பெரிய அளவுக்கு வந்து விட முடியும் என்று நினைத்த ஜூனியர் சிவாஜியும், இசையமைப்பாளர் ரெஹ்னாவும்(ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை) சத்தமே இல்லாமல் இருக்க, அந்தப் படத்தில் அறிமுகமான சுபா புன்ஜா அமர்க்களமாக "திருடியஇதயத்தை என்ற படத்தில் நடித்து வருகிறார். "பார்வை ஒன்று போதுமே, "பேசாத கண்ணும் பேசுமே போன்ற மகா தோல்விப் படங்களை இயக்கிய முரளிகிருஷ்ணாதான்இந்தப் படத்தையும் இயக்குகிறார். (எப்படிதான் தயாரிப்பாளர்களைப் பிடிக்கிறாரோ?)புதுமுகம் ரோஹன், சுபா புன்ஜா ஆகியோருடன் குணால், நிழல்கள் ரவி, ராம்ஜி, அஞ்சலி தேவி ஆகியோர் படத்தில்நடிக்கிறார்கள். முதல் படம் போணியாகாவிட்டாலும் தமிழில் இரண்டாவது படம் கிடைத்து விட்ட சந்தோஷத்தில் இருக்கிறார் சுபா. இது தவிரதெலுங்கு மலையாளம் மற்றும் தாய்மொழியான கன்னடத்திலும் வாய்ப்பு வந்துள்ளதாம்.பிறந்தது மங்களூர், படித்தது பெங்களூர், பிழைப்பது சென்னை என்று இருக்கும் சுபாவை சந்தித்து, சினிமாவிற்கு எப்படிவந்தீர்கள் என்ற தொன்று தொட்டு கேட்கப்படும் கேள்வியைக் கேட்டோம். தமிழ் ரசிகர்களை உய்விக்கும் இந்தக் கேள்விக்கு சுபா கூறிய பதிலாவது: படிக்கும்போதிருந்தே சினிமா என்றால் எனக்கு உயிர். ஸ்கூலில் டான்ஸ், டிராமா என்று எல்லாத்திலேயும் பட்டையைக்கிளப்புவேன். அப்படியே மாடலிங்கிலும் நுழைந்தேன். அவிட்டா சிப்ஸ், கசானா ஜூவல்லரி விளம்பரங்களில் நடித்தேன். 2003ல் சென்னையில் நடந்த மாடலிங் போட்டியில் முதல் பரிசு எனக்குக் கிடைத்தது. அந்த சமயத்தில் தான் "மச்சி பட வாய்ப்புவந்தது. நிறைய நாடகங்களிலும், விளம்பரங்களிலும் நடித்திருந்ததால், கேமரா பயமே எனக்கு இல்லை. நிஜத்தில் நான் ஜாலியானகேரக்டர். படத்திலும் அதே கேரக்டர் என்பதால் ரசித்துச் செய்தேன். "மச்சி படத்தில் என் சொந்தக்குரலில்தான் பேசி நடித்தேன். உங்களது வாய்ஸ் நன்றாக இருக்கிறது, அழகாக தமிழ் பேசுகிறீர்கள்என்று இயக்குநர் சொன்னதால் சொந்தமாகவே டப்பிங் பேசினேன். தமிழ், துளு, கன்னடம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பேச எனக்குத் தெரியும்.கன்னடம் எனது தாய்மொழி என்றாலும் தமிழ் படம் மூலம் அறிமுகமாகத்தான் நான் விரும்பினேன். ஏனெனில் புதியவர்களைவரவேற்று, ஆதரவு கொடுப்பதில் தமிழ் திரையுலகினருக்கு ஈடில்லை.(புல்லரிக்குதப்பா..!) எனக்கு நடிகை ஸ்ரீதேவி போல் வரவேண்டும் என்று ஆசை. நடிப்பு, கிளாமர் இரண்டிலும் கலக்கியவர் அவர். நானும் அதேபோல்வர விரும்புகிறேன். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே பரத நாட்டியம் பயின்றேன். பிறகு வெஸ்டர்ன் டைப் நடனத்திலும் பயிற்சிபெற்றேன். ஹார்ஸ் ரைடிங், டிரைவிங், ஸ்விம்மிங் ஆகியவையும் எனக்குத் தெரியும் என்று காலரை உயர்த்தி விடுகிறார் இவர்.ஒரு நடிகைக்கு இதற்கு மேல் என்ன தகுதி வேண்டும்?சுபாவிடம் 8 நாய்கள் இருக்கிறதாம். இது தவிர ஒரு செல்ல பூனைக்குட்டியையும் வளர்க்கிறாராம் இவர்.பெயருக்கு பின்னால் வித்தியாசமா ஒரு புன்ஜாவை கவனித்தீர்களா? வேறு ஒன்றுமில்லை அது அவருடைய அப்பாவின் "சர்நேமாம்.

    By Staff
    |

    நடிப்புக்கு நடிப்பு, கிளாமருக்கு கிளாமர் என்று கலக்கிய ஸ்ரீதேவி போல நானும் வர ஆசை என்கிறார் "மச்சி புகழ் சுபா புஞ்ஜா.

    "மச்சி படம் மூலம் பெரிய அளவுக்கு வந்து விட முடியும் என்று நினைத்த ஜூனியர் சிவாஜியும், இசையமைப்பாளர் ரெஹ்னாவும்(ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை) சத்தமே இல்லாமல் இருக்க, அந்தப் படத்தில் அறிமுகமான சுபா புன்ஜா அமர்க்களமாக "திருடியஇதயத்தை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    "பார்வை ஒன்று போதுமே, "பேசாத கண்ணும் பேசுமே போன்ற மகா தோல்விப் படங்களை இயக்கிய முரளிகிருஷ்ணாதான்இந்தப் படத்தையும் இயக்குகிறார். (எப்படிதான் தயாரிப்பாளர்களைப் பிடிக்கிறாரோ?)

    புதுமுகம் ரோஹன், சுபா புன்ஜா ஆகியோருடன் குணால், நிழல்கள் ரவி, ராம்ஜி, அஞ்சலி தேவி ஆகியோர் படத்தில்நடிக்கிறார்கள்.

    முதல் படம் போணியாகாவிட்டாலும் தமிழில் இரண்டாவது படம் கிடைத்து விட்ட சந்தோஷத்தில் இருக்கிறார் சுபா. இது தவிரதெலுங்கு மலையாளம் மற்றும் தாய்மொழியான கன்னடத்திலும் வாய்ப்பு வந்துள்ளதாம்.

    பிறந்தது மங்களூர், படித்தது பெங்களூர், பிழைப்பது சென்னை என்று இருக்கும் சுபாவை சந்தித்து, சினிமாவிற்கு எப்படிவந்தீர்கள் என்ற தொன்று தொட்டு கேட்கப்படும் கேள்வியைக் கேட்டோம்.

    தமிழ் ரசிகர்களை உய்விக்கும் இந்தக் கேள்விக்கு சுபா கூறிய பதிலாவது:

    படிக்கும்போதிருந்தே சினிமா என்றால் எனக்கு உயிர். ஸ்கூலில் டான்ஸ், டிராமா என்று எல்லாத்திலேயும் பட்டையைக்கிளப்புவேன். அப்படியே மாடலிங்கிலும் நுழைந்தேன். அவிட்டா சிப்ஸ், கசானா ஜூவல்லரி விளம்பரங்களில் நடித்தேன்.

    2003ல் சென்னையில் நடந்த மாடலிங் போட்டியில் முதல் பரிசு எனக்குக் கிடைத்தது. அந்த சமயத்தில் தான் "மச்சி பட வாய்ப்புவந்தது.

    நிறைய நாடகங்களிலும், விளம்பரங்களிலும் நடித்திருந்ததால், கேமரா பயமே எனக்கு இல்லை. நிஜத்தில் நான் ஜாலியானகேரக்டர். படத்திலும் அதே கேரக்டர் என்பதால் ரசித்துச் செய்தேன்.

    "மச்சி படத்தில் என் சொந்தக்குரலில்தான் பேசி நடித்தேன். உங்களது வாய்ஸ் நன்றாக இருக்கிறது, அழகாக தமிழ் பேசுகிறீர்கள்என்று இயக்குநர் சொன்னதால் சொந்தமாகவே டப்பிங் பேசினேன்.

    தமிழ், துளு, கன்னடம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பேச எனக்குத் தெரியும்.

    கன்னடம் எனது தாய்மொழி என்றாலும் தமிழ் படம் மூலம் அறிமுகமாகத்தான் நான் விரும்பினேன். ஏனெனில் புதியவர்களைவரவேற்று, ஆதரவு கொடுப்பதில் தமிழ் திரையுலகினருக்கு ஈடில்லை.(புல்லரிக்குதப்பா..!)

    எனக்கு நடிகை ஸ்ரீதேவி போல் வரவேண்டும் என்று ஆசை. நடிப்பு, கிளாமர் இரண்டிலும் கலக்கியவர் அவர். நானும் அதேபோல்வர விரும்புகிறேன்.

    பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே பரத நாட்டியம் பயின்றேன். பிறகு வெஸ்டர்ன் டைப் நடனத்திலும் பயிற்சிபெற்றேன். ஹார்ஸ் ரைடிங், டிரைவிங், ஸ்விம்மிங் ஆகியவையும் எனக்குத் தெரியும் என்று காலரை உயர்த்தி விடுகிறார் இவர்.ஒரு நடிகைக்கு இதற்கு மேல் என்ன தகுதி வேண்டும்?

    சுபாவிடம் 8 நாய்கள் இருக்கிறதாம். இது தவிர ஒரு செல்ல பூனைக்குட்டியையும் வளர்க்கிறாராம் இவர்.

    பெயருக்கு பின்னால் வித்தியாசமா ஒரு புன்ஜாவை கவனித்தீர்களா? வேறு ஒன்றுமில்லை அது அவருடைய அப்பாவின் "சர்நேமாம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X