»   »  முழு விபரம்

முழு விபரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஜோதிகாவை திருமணம் செய்யும் திட்டமே இல்லை என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார். தந்தை சிவகுமாரின் கடும் எதிர்ப்பு தான்இதற்கு காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இயக்குனர் வஸந்தின் "பூவெல்லாம் கேட்டுப் பார் என்ற படத்தின் மூலம் சூர்யாவும் நக்மாவின் தங்கையான ஜோதிகாவும்திரையுலகில் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே இருவருக்கும் "பத்திக்கிச்சு என்றாலும் கண்டிப்பான தனது அப்பாவுக்கு பயந்து சூர்யா தனது காதலை மூடிமறைத்து வந்தார்.

ஆனால் அதை நெடு நாள் மறைக்க முடியவில்லை. காக்க காக்க, பேரழகன் போன்ற படங்களில் மிகவும் நெருக்கமாக நடித்தஇருவரும், சமீபத்தில் பாலாவின் மேற்பார்வையில் உருவான மாயாவியிலும் இருவரும் ஜோடி சேர்ந்தனர்.

இருவரின் காதல் குறித்தும் பரவலாக பத்திரிகைகளிலும், கோலிவுட்டிலும் பரபரப்பாக பேசப்பட்டாலும் சூர்யாவும் ஜோதிகாவும்இந்த விஷயத்தில் ஆழ்ந்த அமைதி காத்தே வந்தனர்.

இந்த சினிமா காதலை சிவக்குமார் ஏற்கவே இல்லை என்று தெரிகிறது.

சூர்யாவுடன் ஜோதிகா பெயரை சேர்த்து எழுதினால் வக்கீல் நோட்டீஸ் அனுப்புவேன் என்று பல முறை பத்திரிக்கையாளர்களைசிவகுமார் எச்சரித்த சம்பவங்களும் நடந்துள்ளன. ஆனாலும் இதையும் மீறி சூர்யா-ஜோ விவகாரம் கோலிவுட்டை சுற்றிச் சுற்றிவந்தபடியே உள்ளது.

தனது தங்கையின் திருமணத்துக்குப் பின் ஜோதிகாவுடனான திருமணத்தை முடிக்க சூர்யா திட்டமிட்டதாகவும், ஆனால்,ஜோதிகாவுடனான திருமணத்துக்கு சிவக்குமார் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது.

இந் நிலையில் நேற்று ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும் வரும் ஜூலை மாதம் கல்யாணம் என்றுசெய்தி போடப்பட்டுள்ளது. சூர்யாவுக்கு மிக நெருக்கமான டைரக்டர் பாலா தான் இவர்களது திருமணத்தை முன்னின்று நடத்தஉள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பாலாவுக்கு காட்பாதர் நிலையில் இருப்பவர் சிவக்குமார். அவரை அப்பா என்றே மரியாதையுடன் அழைப்பார் பாலா.சிவக்குமார் சொல்லித் தான் தனது திருமணத்துக்கே ஒப்புக் கொண்டார் பாலா. இதனால் சிவக்குமாருக்குப் பிடிக்காத ஒருதிருமணத்தை பாலா நடத்தி வைப்பாரா என்ற கேள்விகள் எழுந்தன.

இது குறித்து சிவகுமாரிடம் விளக்கம் கேட்க நிருபர்கள் முயன்ற போது அவர் கோவை சென்றுவிட்டதாக தகவல் கிடைத்தது.

இது குறித்து பாலாவிடம் கேட்டபோது, ""நான் பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் வேறு வழியில்லாமல் பதில்சொல்கிறேன். சூர்யா-ஜோதிகாவின் திருமணத்தை நான் முன்னின்று நடத்த உள்ளதாக வந்த செய்தி முழுக்க முழுக்க தவறானது.

என்னுடைய திருமணத்தை நடத்தி வைத்தது சிவகுமார் சார் தான். அவருடைய குடும்பத்தில் நான் மூத்த பிள்ளை என்றால் அதுமிகையில்லை. எனவே அந்தப் பத்திரிகையில் சூர்யா திருமணத்தை ஒரு பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக யூகமாகத்தான் எழுதியிருக்க வேண்டும்.

இவர்கள் உண்மையாகவே திருமணம் செய்துகொள்ளப் போகிறார்களா என்று எனக்குத் தெரியாது. பத்திரிகையில் யூகமாகஎழுதப்பட்டுள்ள அந்த திருமணத்திற்கு முன்பு எங்கள் வீட்டில் (சிவகுமார் வீட்டில் தான்) வேறு ஒரு நல்ல காரியம் (சூர்யாதங்கையின் திருமணம்) நடைபெற உள்ளது.

அதற்குப் பிறகாவது சூர்யா-ஜோதிகா திருமணம் நடைபெறுமா என்று நீங்கள் கேட்க வருவது எனக்குப் புரிகிறது. அதற்குப் பதில்இப்போது என்னிடம் இல்லை என்று நழுவிக் கொண்டார் பாலா.

இங்கு இவ்வளவு பரபரப்பு நடந்து கொண்டிருக்க சூர்யா இப்போது இருப்பது மும்பையில். அவரைப் பிடிக்க முடியாததால்அவரது மேனேஜர் கூறுகையில்,

""ஜோதிகாவை சூர்யா திருமணம் செய்யப்போவதாக வந்த செய்தி குறித்து ஏராளமான பேர் என்னிடம் கேட்டார்கள். இது குறித்துநான் மும்பையில் உள்ள சூர்யாவிடம் கேட்டேன். அதற்கு அவர், அந்த செய்தியில் உண்மை இல்லை என்று கூறிவிடும்படிஎன்னிடம் தெரிவித்தார்.

குறிப்பிட்ட அந்த ஆங்கிலப் பத்திரிகை ஜோதிகாவிடம் பேட்டி கேட்டு கொடுக்காததால் இப்படி எழுதியிருக்கிறார்கள் என்றார்.

எனவே இப்போதைக்கு சூர்யா-ஜோதிகா திருமண விஷயம் ஒரு மர்மத் தொடர் போல சென்று கொண்டிருக்கிறது.

Read more about: jyothika no plan surya tamil flims

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil