நன்றாக இருந்த உச்ச நடிகரை சந்தி சிரிக்க வைத்த இயக்குநர்.. தலைவைத்தே படுக்க கூடாதுனு முடிவெடுத்த நடிகர்!
சென்னை: உச்ச நடிகர் கடந்த சில படங்களாகவே அடுத்தடுத்து ஹிட் கொடுத்து செம பீக்கில் இருந்தார். இன்னும் சொல்லப்போனால் இவரது படம் தான் தமிழ் சினிமாவுக்கு வசூல் ரீதியாக பேரும் புகழும் வாங்கிக் கொடுக்கும் என்று நினைத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் அப்படியான உச்ச நடிகருக்கே விபூதி அடித்துள்ளார் அந்த யுனிவர்ஸ் இயக்குநர். ஆனால் அது பத்தாது என்று அந்த இயக்குநர் உச்ச நடிகருக்கு தொல்லை கொடுத்து வருகிறாராம்.
அதாவது இந்த யுனிவர்ஸ் இயக்குநர் ஏற்கனவே ஒரு மூத்த நடிகரின் தீவிர ரசிகராக உள்ளார். இப்படி இருக்கும்போது, பல முன்னணி நடிகர்களுக்கு அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்து வெற்றி இயக்குநராகத்தான் வலம் வந்து கொண்டு இருந்தார். இவருக்கு உச்ச நடிகரை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததும் தமிழ் சினிமாவே இவர்களின் காம்பினேஷனில் ஒரு படம் வெளியாகிறது என்றால், படம் எப்படி இருக்கும் என்று எல்லாம் பேச ஆரம்பித்து படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்போடு தான் இருந்தார்கள். படம் பெரிய அளவில் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்த்தால் வழக்கம்போல் ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது என்பதைப் போல படம் சொதப்பி விட்டது.

சொதப்பிய இயக்குநர்: இதனால் அதிரடியாக வெற்றிகளைக் குவித்து வந்த உச்ச நடிகருக்கு பெரிய சறுக்கல். இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தால்தான் படம் ஒர்க் அவுட் ஆகவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் படத்தின் திரைக்கதையில் பல ஓட்டைகள், சொதப்பல்கள் இருந்ததுதான் காரணமே. இப்படி இருக்கும்போது உச்ச நடிகர் இனிமேல் இந்த யுனிவர்ஸ் இயக்குநருடன் சேரக்கூடாது என்று தீர்க்கமாக முடிவெடுத்துவிட்டாராம். இப்படி இருக்கையில் உச்ச நடிகர் தனக்கு இணையான நடிகர் ஒருவருடன் இணைந்து நடிக்க கமிட் ஆகியுள்ளாராம்.
சொல்லி அனுப்பிய உச்ச நடிகர்: ஆனால் அந்த படத்தின் கதை, இயக்குநர் என எதுவும் முடிவாகாததால், இந்த யுனிவர்ஸ் இயக்குநர் அதற்கு முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் உச்ச நடிகரோ தம்பி உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டாய் இனி சேர்ந்து படம் பண்ணினால் நம்ம ரெண்டு பேருக்கும் சிரமம் அதனால வேண்டாம் என்று டீசெண்ட்டாக சொல்லி அனுப்பிவிட்டாராம். இதனால் உச்ச நடிகர் மூத்த நடிகருடன் இணைந்து படம் பண்ணுவதற்கு இயக்குநர்கள் பலரும் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











