பெயரைக் கெடுத்துக் கொண்ட நடிகர்.. படத்தை ரிலீஸ் செய்ய மோசமான முடிவா? அம்பலமானால் எல்லாம் போச்சு!

By Staff

சென்னை: இந்த நடிகர் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகராக உள்ளார். இவரது படம் வெளியாகிறது என்றாலே அதற்கு முந்தைய வாரமே எந்த படங்களையும் தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் ரிலீஸ் செய்ய மாட்டார்கள். காரணம், இந்த நடிகரின் படத்தின் கதை நன்றாக இருக்கிறதோ இல்லையோ எப்படியும் கல்லா கட்டிவிடும். இப்படி இருக்கும்போது இந்த நடிகருக்கு ஏதே நேரம் சரியில்லை போல, சமீப காலமாக அவருக்கு நடைபெற்றவை எல்லாம் அப்படித்தான் உள்ளது.

இந்நிலையில் நடிகர் தனது அடுத்த படத்தை ரிலீஸ் செய்வதில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட கூடாது என்பதற்காக அவர் செய்துள்ள விஷயம் பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. அதாவது இந்த நடிகர் சினிமாவில் இருந்து கொண்டு, வேறு ஒரு அதிகாரமுள்ள இடத்திற்கு தாவலாம் என்று முடிவெடுத்து கடந்த சில ஆண்டுகளாக அதற்குண்டான வேலைகளைச் செய்து வருகிறார். இப்படி இருக்கும்போது, நடைபெற்ற துயரச் சம்பவத்தில் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள், ஆண்கள் என பலரும் இறந்து போனார்கள். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tamil Cinema Gossip Actor Who Took Very Bad Decision For Release His Movie

படத்தை ரிலீஸ் செய்ய நெருக்கடி: இப்படி இருக்கும்போது நடிகர் தனது படத்தை அடுத்த ஆண்டின் இரண்டாவது வாரத்தில் ரிலீஸ் செய்ய எல்லா வேலைகளையும் செய்து வருகிறது தயாரிப்பு நிறுவனம். இப்படி இருக்கும்போது இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்தால் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களுக்கு பயணம் செய்ய வேண்டி வரும், எனவே இதற்கு பல வாரங்களுக்கு மேல் எடுத்துக் கொள்ளவோ, மாதங்கள் எடுத்துக் கொள்ளவோ அதிக வாய்ப்புகள் உள்ளது.

மோசமான முடிவு: எனவே நடிகர் தானே வீடுவீடாக சென்றால் படத்தை சொன்ன தேதியில் ரிலீஸ் செய்ய முடியாது, எனவே, படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றால், முதலில் இந்த பிரச்னையை முடித்து விட வேண்டும், எனவே உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை எல்லாம் ஒரே இடத்திற்கு வர வைத்து விட்டால், ஒரே நாளில் வேலை முடிந்துவிடும், இந்த வேலை முடிந்த அடுத்த வாரத்திலோ அல்லது அதற்கு அடுத்த வாரத்திலோ படத்தின் புரோமோசன் வேலைகளைத் தொடங்கினால், பட ரிலீஸ்க்கு சாதகமாக இருக்கும் என்று யோசித்து நடிகர் இந்த முடிவை எடுத்துள்ளாராம். இந்த விஷயம் வெளியே தெரிந்தால், ஏற்கனவே நடிகரை கடுமையாக விமர்சித்து வருபவர்கள் மேலும் கடுமையாக விமர்சிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கையில் இந்த விஷயம் வெளியே கசியத் தொடங்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X