ஸ்டார் நடிகரின் கடைசி படத்தில் சிக்கல்.. காசு பார்க்க நினைத்த தயாரிப்பு நிறுவனத்திற்கு விழுந்த அடி!

சென்னை: கோடான கோடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த அந்த ஸ்டார் நடிகர் தற்போது அரசியல் எண்ட்ரி கொடுத்து பெரும் புயலை கிளப்பி உள்ளார். அரசியலில் இறங்கி உள்ளதால், நடிப்புக்கு முழுக்கு போட்டு இருக்கும் அந்த ஸ்டார் நடிகரின், கடைசி படத்தை பெரிய அளவில் வியாபாரமாக்க தயாரிப்பு நிறுவனம் மாஸ்டர் பிளான் போட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் அந்த நடிகர், மெதுமெதுவாக மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செய்து, தனக்கு என்று ஒரு இடத்தை விரிவாக்கி தற்போது அரசியலில் குதித்துள்ளார். அரசியலுக்கு எண்ட்ரி கொடுத்ததுமே, மக்களுக்கு சேவை செய்வது தான் என் எண்ணம், அரசியலுக்கு வந்ததும், சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிடுவேன் என கூறி ஒட்டுமொத்த மக்களின் மனதிலும் இடம்பிடித்தார். தான் நடிக்கும் கடைசி படம் மாஸ் படமாகவும், அரசியல் எண்ட்ரிக்கு ஏற்ற படமாக இருக்க வேண்டும் என நினைத்த அந்த ஸ்டார் நடிகர், அதற்கான கதையை தேடி அலைந்தார்.

Gossip Kisu kisu

அரசியல் எண்ட்ரி: ஸ்டார் நடிகரின் அரசியல் எண்ட்ரி: கிட்டத்தட்ட 13 இயக்குநர்களிடம் கதையை கேட்ட அந்த ஸ்டார் நடிகருக்கு எதுவுமே, தனது அரசியல் எண்ட்ரி ஏற்ற கதையாக இல்லை என சொல்லி அனைத்தையும் நிராகரித்து வந்தார். கடைசியாக பெரிய நடிகர் ஒருவருக்கு வைத்திருந்த கதையை இயக்குநர் சொல்ல, அந்த கதை பிடித்துபோக கதையில் சில மாற்றங்களை செய்யப்பட்டு படம் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தேர்தல் வர உள்ளதால், அதற்குள் படத்தை முடித்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அப்போது தான் ஸ்டார் நடிகரின் அரசியல் எண்ட்ரிக்கு சரியாக இருக்கும் என சொல்லப்படுகிறது

பிரம்மாண்ட விழா: இந்நிலையில், ஸ்டார் நடிகரின் கடைசி படத்தை பெரிய அளவில் வியாபாரமாக்க தயாரிப்பு நிறுவனம் மாஸ்டர் பிளான் போட்டுள்ளது. அதாவது, படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை தமிழ் சினிமாவில் இருக்கும் ஒட்டுமொத்த நடிகர், நடிகைகளை அழைத்து ஒரு பிரம்மாண்ட திருவிழாப்போல நடித்த படக்குழு திட்டமிட்டு அதற்கான வேலைகளில் இறங்கி உள்ளது. இதற்காக முன்னணி ஸ்டைல் நடிகரை அணுக முயற்சி செய்துள்ளனர். ஏற்கனவே இவருக்கும் ஸ்டைல் நடிகருக்கும் அந்த சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து இருப்பதால், அழைத்தாலும், அவர் வர வாய்ப்பு இல்லை என்பதால் அவரை அழைப்பதில் படக்குழுவிற்கு தயக்கம் உள்ளது. அதே போல, நடிப்பு நாயகனை அழைத்து விழா நடத்தலாம் என்றால், அவர் ஒரு கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறார். இதனால், அவரும் வர வாய்ப்பு இல்லை.

அப்செட்டில் படக்குழு: அண்மையில் நடந்த பெரிய துயர சம்பவத்திற்கு பிறகு எந்த நடிகர்களும் ஸ்டார் நடிகருடன் நெருக்காமல் இருப்பதை தவிர்த்து வருகிறார்களாம். கடைசி பட விழாவில் கலந்து கொண்டால், தங்களின் சினிமா எதிர்காலம் என்ன ஆகும் என்கிற பயம் பல நடிகர்களுக்கும் நடிகைக்கும் இருப்பதால், இப்போதில் இருந்தே அவருடன் இனக்கமாக இருப்பதை சில நடிகர்கள் தவிர்த்து உள்ளனர். இதனால், நடிகரின் கடைசி படத்தை வைத்து பெரிய அளவில் விளம்பரப்படுத்து காசு பார்க்க நினைத்த தயாரிப்பு நிறுவனம் அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், பட இசைவெளியீட்டு விழாவிற்கு பெரிய நடிகர்கள் வர வாய்ப்பே இல்லை என்பதுதான் இப்போதைய கோலிவுட் வட்டாரத்தின் பேச்சாக இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X