தொடர் தோல்வி.. மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே மூட்டை முடிச்சியைக் கட்ட திட்டமிட்ட நடிகை.. புலம்பல்!

By Staff

சென்னை: கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு படையெடுத்த அந்த பிரபல நடிகை தனது நடிப்பால் ஏகப்பட்ட நடிகைகளின் மார்க்கெட்டை காலி செய்தார்.

ஆனால், சமீப காலமாக நடிகையின் படங்கள் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், நடிகை ரொம்பவே அப்செட் ஆகி உள்ளார்.

இயக்குநர்கள் நடிகைகளை நல்லா யூஸ் பண்ணி விட்டு ஹிட் கொடுக்காமல் ஏமாற்றி வருவதால் கவலையில் உடைந்து போயுள்ளாராம் நடிகை.

அடக்கமுடியாத ஆத்திரம்

அடக்கமுடியாத ஆத்திரம்

சிரித்த முகத்துடன் காணப்பட்டு வந்த அந்த நடிகையின் முகம் இப்போதெல்லாம் எதை போட்டாலும் பொறித்து தள்ளிவிடும் அளவுக்கு எண்ணெய் சட்டி போல அடக்கமுடியாத ஆத்திரத்தில் சுட்டெரித்து வருகிறாராம். கஷ்டப்பட்டு நடிச்சாலும் படம் ஏதும் ஓடவில்லையே என ரொம்பவே கடுப்பில் மனம் உடைந்து போயுள்ளாராம்.

மார்க்கெட் காலி

மார்க்கெட் காலி

தனது நடிப்பால் பாலிவுட்டின் பல முன்னணி நடிகைகளின் மார்க்கெட்டை அசால்ட்டாக காலி பண்ணி ஹேப்பியாக ஏகப்பட்ட படங்களை வாரி போட்டு நடித்து வந்த அந்த நடிகையின் மார்க்கெட் தற்போது அதள பாதாளத்திற்கு சென்று விட்டதால், தேம்பி தேம்பி ரூம் போட்டு அழுது வருகிறாராம்.

மரண அடி

மரண அடி

சமீபத்தில் பல கோடி மதிப்பில் ஹாலிவுட் படத்தை எல்லாம் ரீமேக் செய்து அந்த நடிகை நடித்த படம் சில லட்சங்கள் மட்டுமே வசூல் செய்து மரண அடி கொடுத்த நிலையில், இனிமேல் இவரை வைத்து பாலிவுட்டில் படம் பண்ண எந்தவொரு தயாரிப்பாளரும் தயாராகவில்லை என்கிற தகவல்கள் நடிகையின் காதுகளுக்கே எட்டிய நிலையில் தான் இவ்வளவு டென்ஷனாம்.

புறப்பட்ட இடத்துக்கே

புறப்பட்ட இடத்துக்கே

கோலிவுட்டில் அப்படியே நடித்து வந்திருந்தாலும், இந்நேரம் தனது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து இருப்பார். ஆனால், தற்போது வேறு வழியில்லாமல் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே மூட்டை முடிச்சுக் கட்டிவிட்டு வர முடிவெடுத்து விட்டாராம் அந்த நடிகை. சின்ன தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுடன் நடிக்கவும் ஓகே சொல்லி கால்ஷீட்டை தாராளமாக கொடுக்க முடிவெடுத்துள்ளாரம்.

இப்படி ஆகிடுச்சே

இப்படி ஆகிடுச்சே

டாப்பில் இருந்த நடிகையின் நிலைமை திடீரென இப்படி அதள பாதாளத்திற்கு சென்று விட்டதே என கோலிவுட்டில் இருக்கும் ஒரு சில பிரபலங்களே நடிகையின் நிலைமையை நினைத்து ஃபீல் செய்து வருகிறார்களாம். ஆனால், இங்கே எப்படிப்பட்ட படங்கள் இப்போதைக்கு நடிகைக்கு கிடைக்கும் என்பதிலும் மிகப்பெரிய கேள்விக் குறி எழுந்துள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. நடிகையை பார்ப்பவர்களும், கண்டிப்பாக படம் பண்ணலாம் என வாய் வார்த்தைக்கு மட்டுமே பேசிவிட்டு, எந்தவொரு அட்வான்ஸும் இதுவரை தராமல் காலம் தாழ்த்தி வருகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X