தியேட்டர்கள் காத்து வாங்குதாம்.. அந்த பக்கம் போகவே பயப்படும் ரசிகர்கள்.. அதுதான் காரணமா?
சென்னை: பெரிய நட்சத்திர பட்டாளம் இருந்தாலும், அந்த புதிய படத்தை நம்பி டிக்கெட் எடுக்க ரசிகர்கள் தயங்கி வருவதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.
படத்திற்கான பெரிய புரமோஷனிலும் படக்குழுவே நம்பி இறங்காத நிலையில், நாங்க மட்டும் ஏன் காசு கொடுத்து தலைவலியை வாங்கணும் என ரசிகர்கள் நினைத்து விட்டார்களாம்.
இதற்கு மேலும், ஒரு முக்கிய காரணம் இருப்பதாகவும் தற்போது பரபரப்பாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

டயர்டான ரசிகர்கள்
தொடர்ந்து வெளியாகும் கோலிவுட் படங்களை பார்க்க ஆர்வமுடன் டிக்கெட் எடுத்து நைட் எல்லாம் தூங்காமல் கொள்ளாமல் மேள தாளத்துக்கெல்லாம் செலவு செய்து ரசிகர்கள் ரொம்பவே டயர்ட் ஆகி விட்டார்கள். இந்த நிலையில், இன்னொரு படத்தை தியேட்டரில் போய் பார்க்க பலரும் தயாராக இல்லாத மனநிலைக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொடர் சொதப்பல்
பெரிய நடிகர்கள், நடிகைகள் நடிக்கிறார்கள் என நம்பித்தான் அதிக விலைக்கு டிக்கெட் வாங்கி முதல் நாள் முதல் காட்சிக்கு செல்கின்றனர். ஆனால், சமீபத்தில் ரசிகர்களை பல படங்கள் வச்சு செய்த நிலையில், புதிதாக கோலிவுட் படங்களா அய்யோ வேண்டாம் என்கிற மனநிலைக்கே ரசிகர்கள் வந்து விட்டார்களாம்.

வெறுப்பேற்றிய ஹீரோ
கடந்த ஆண்டு இந்த ஹீரோ நடித்த பல படங்கள் தொடர்ந்து ரசிகர்களை மண்டையை காய வைத்ததை இன்னும் ரசிகர்கள் கொஞ்சம் கூட மறக்கவில்லையாம். அதன் காரணமாகவே முந்தியடித்துக் கொண்டு முதல் நாள் காட்சிக்கெல்லாம் போக வேண்டாம் பொறுமையாக விமர்சனம் பார்த்து விட்டு போகலாம் என ஏகப்பட்ட இளைஞர்கள் திடீர் முடிவு எடுத்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் ட்வீட் போட ஆரம்பித்து விட்டனர்.

ஹீரோயின்களுக்காக
சிலர் அந்த இரு ஹீரோயின்களுக்காக படத்தை பார்க்கலாம் என நினைத்தாலும், நம்பர் நடிகையின் முந்தைய படத்தை ஓடிடியிலேயே பார்க்க முடியவில்லை. அவருக்காக காசு செலவு செய்ய வேண்டுமா? என்றும் சமத்து நடிகை குத்தாட்டம் போட்டாலாவது பார்க்கலாம் என்றும் சமூக வலைதளத்தில் கலாய்த்து வருகின்றனர்.

நடிகைக்கே நம்பிக்கை இல்லை
மேலும், தனது படத்தை புரமோஷன் செய்ய இரு நடிகைகளும் வரவில்லை. அந்தளவுக்கு அவர்களுக்கே படத்தின் மீது நம்பிக்கை இல்லை எனத் தெரிகிறது என பலரும் கருதியதால் தான் படத்தின் டிக்கெட் புக்கிங் ரொம்பவே டல் அடித்து வருவதாக கூறுகின்றனர். விடுமுறை நாள் இல்லாத நிலையில், வேலை நாளில் யார் லீவு போட்டு படத்துக்கு போவாங்க என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

நம்பிக்கையுடன் இயக்குநர்
படத்திற்கு எதிர்பார்த்த ஓப்பனிங் இல்லை என்றாலும், விமர்சனங்கள் நிச்சயம் பாசிட்டிவ் ஆக வரும் அதன் பின்னர் தியேட்டரை நோக்கி ரசிகர்கள் படையெடுப்பார்கள் என்பதில் இயக்குநர் ரொம்பவே நம்பிக்கை உடன் இருப்பதாகவும், படம் ரசிகர்களை நிச்சயம் ஹேப்பியாக்கும் என உறுதியுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











