»   »  குஷ்பு கைவிட்ட கரகாட்டாகாரி

குஷ்பு கைவிட்ட கரகாட்டாகாரி

Subscribe to Oneindia Tamil

கரகாட்டக்காரி படத்தில் இருந்து குஷ்பு விலகிவிட்டதாக சொல்கிறார்கள். இந்த ரோலில் நடிக்க மீனாவும் மறுத்துவிட்டதால் ரோஜாநடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஒரு கரகாட்டக்காரப் பெண்ணின் உண்மைக் கதையை படமாக்கப் போவதாகக் கூறிக் கொண்டு இந்த ப்ராஜெக்டைதொடங்கினார் இயக்குனர் பாரதி கண்ணன். இதற்கு இசையமைக்க ஒப்புக் கொண்டார் இசைஞானி இளையராஜா.

லண்டன் ஷோபனின் ஸ்ரீ நிதி ஆர்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளதாகக் கூறப்பட்டாலும் இந்தப்படத்துக்கு பைனான்ஸ் செய்வது நடிகை விலாசினி தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

பாண்டியராஜனுடன் நல்ல மனசுக்காரன், ஆண்டிப்பட்டி அரசம்பட்டி ஆகிய படங்களில் நடித்த விலாசினிக்குசினிமாவில் பெரிய அடையாளம் ஏதும் இல்லை. இந் நிலையில் கோடம்பாக்கம் ஏரியாவில் விபச்சாரத்தில்ஈடுபட்டபோது பிடிபட்டு பிரபலமானார்.

பின்னர் ஒரு இயக்குனரோடு கிசுகிசுக்கப்பட்டார். இப்படிப் போய்க் கொண்டிருந்த விலாசியின் வாழ்க்கைஇப்போது அவரை தயாரிப்பாளராக்கியிருக்கிறது. படம் தயாரிக்கும் அளவுக்கு இவர் வளர்ந்தது பலருக்கும்ஆச்சரியமே.

குஷ்புவுடன் தானும் நடித்து கரகாட்டக்காரியை எடுக்க திட்டமிட்டிருந்தார் விலாசினி. இந்தப் படத்துக்காகஉடம்பைக் குறைக்க குஷ்பு அமெரிக்கா போய் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது.

பட்டுக்கோட்டை ஏரியாவில் பிரபலமான ஒரு கரகாட்ட கோஷ்டியை சென்னைக்குக் கொண்டு வந்து பயிற்சியும்எடுக்க ஆரம்பித்தார் குஷ்பு.

ஆனால், இடையில் என்ன ஆனதோ, இதில் இருந்து குஷ்பு விலகிவிட்டதாக சொல்கிறார்கள். தனது கணவர்சுந்தரை வைத்து கிரி படத்தை தயாரித்த குஷ்பு அடுத்தும் படத் தயாரிப்பில் இறங்கப் போவதாகவும், இதனால்தான் கரகாட்டகாரியில் இருந்து விலகியதாகவும் சொல்கிறார்கள்.

இதையடுத்து இந்த ரோலில் மீனாவை நடிக்க வைக்க முயன்றார் விலாசினி. கன்னடத்தில் உப்புமா படங்களில்நடித்து வரும் மீனா, தமிழில் எந்த வாய்ப்பு கிடைத்தாலும் நடிக்கத் தயாராக இருந்ததால் உடனே ஒப்புக்கொண்டார்.

ஆனால், திமுக தலைவர் கருணாநிதி கதை வசனம் எழுதும் கண்ணம்மா படத்தில் நடிக்க சான்ஸ் வந்ததும்,கரகாட்டக்காரியில் நடிக்க நடிக்க மறுத்துவிட்டாராம் மீனா.

இதையடுத்து அந்த ரோலில் ரோஜாவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

இப்போது கன்னட டிவி சீரியலில் அம்மா வேடத்தில்நடித்து பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறார் ரோஜா. விரைவில் சினிமாவிலும் அம்மா வேடத்தில் நடிக்க இருப்பதாய் சொல்கிறார்கள்.

இந்த நிலையில் கரகாட்டக்காரியில் கும்மாங்குத்து ஆடக் கூப்பிட்டால் நிச்சயம் ரோஜா தட்ட மாட்டார் என்றே தெரிகிறது.

இந்தப் படத்தில் நடிக்க கரகாட்டக்காரன் பட ஹீரோயின் கனகாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil