பிறந்தநாளில் திருமண அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ள விரல் நடிகர்.. அந்த நடிகையுடன் தானா?

சென்னை: ஏகப்பட்ட நடிகைகளுடன் காதல் கிசுகிசுக்களில் அடிபட்ட விரல் நடிகர் சில நடிகைகளுடன் டீப் லவ்வில் இருந்து பின்னர் பிரேக்கப் செய்தது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது.

இந்நிலையில், இளம் நடிகையை வீட்டிலேயே வைத்து காதலித்து வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வந்தன.

ஆனால், அதை மறுத்து எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாத அந்த நடிகர் தனது பிறந்தநாள் அன்று தனது திருமண அறிவிப்பை அறிவிக்க திட்டமிட்டு இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

நடிகைகள் தான் டார்கெட்

நடிகைகள் தான் டார்கெட்

சிறு வயதில் இருந்தே சினிமாவில் இருந்து வரும் அந்த விரல் நடிகர் இதுவரை பல நடிகைகளுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கி உள்ளார். பல முன்னணி நடிகைகளை மட்டுமே டார்கெட் செய்து விரல் நடிகர் துரத்தி துரத்தி காதல் செய்து வந்த நிலையில், கடைசியில் அவை எல்லாமே பிரேக்கப்பிலே முடிந்து அவரை சோகத்தில் ஆழ்த்தியது.

பிரபலத்தின் மகள்

பிரபலத்தின் மகள்

இந்த லிஸ்ட்டில் விரல் நடிகர் நடிகை அல்லாத ஒருவரையும் காதலித்து வந்ததாக கிசுகிசுக்கள் எழுந்தன. உச்ச நடிகரின் மகளை விரல் நடிகர் காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், இந்த நடிகருக்கு போட்டியாக களமிறங்கிய அந்த நடிகர் அந்த பிரபலத்தின் மகளை திருமணம் செய்து கொண்டது சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை அளித்தது.

அந்த நம்பரை விடவில்லை

அந்த நம்பரை விடவில்லை

நம்பர் நடிகையும் விரல் நடிகரும் உருகி உருகி காதலித்து அவருக்காக சினிமாவில் உச்சக்கட்ட காட்சிகளில் எல்லை மீறி நடித்து வந்த நிலையில், நடிகர் மீது டிரஸ்ட் ஏற்படாத நிலையில், அவரை விட்டு பிரிந்து சென்றார். ஆனால், இன்னமும் அவரை மனதளவில் பிரியாத நடிகர் ஒவ்வொரு பட அறிவிப்புகளையும் அந்த நடிகையின் பெயர் கொண்ட நம்பர் வரும்படியே வெளியிட்டு வருவது ட்ரோல் ஆகியும் வருகிறது.

நடிகையுடன் விரைவில் திருமணம்

நடிகையுடன் விரைவில் திருமணம்

இந்நிலையில், தனது வீட்டிலேயே இளம் நடிகை ஒருவரை ரகசியமாக வைத்துக் கொண்டு கடந்த ஒரு வருடமாக காதலித்து வருவதாகவும் அவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையை நடத்தி வருவதாகவும் பெரியளவிலான தகவல்கள் சினிமா உலகில் கசிந்து ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தன. இந்நிலையில், அந்த நடிகையை விரைவில் விரல் நடிகர் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிறந்தநாளில் அறிவிப்பு

பிறந்தநாளில் அறிவிப்பு

விரைவில் நடிகரின் பிறந்தநாள் விழா கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், அதே நாளில் தனது திருமண அறிவிப்பையும் நடிகர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போகிறார் என்றும் ஹாட் தகவல்கள் கசிந்துள்ளன. இதெல்லாம் எந்தளவுக்கு உண்மை? என்பது அந்த நடிகரே மெளனம் கலைத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் தான் வெளிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X