»   »  இந்தக் கதையப் படிங்க... தெரிஞ்சா பதில் சொல்லுங்க!!

இந்தக் கதையப் படிங்க... தெரிஞ்சா பதில் சொல்லுங்க!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

முன்னெல்லாம் அதிகாலையில... இல்ல நடுநிசில வீதி வீதியா போகும் போது ஜக்கம்மா உத்தரவு வந்தா அவ சொல்ற வாக்க சொல்லிட்டு வந்ததெல்லாம் மலையேறி போச்சி...

இப்ப நல்ல வாக்கு நாலு கேட்டாலும் வாட்ஸ் அப், இமெயிலுன்னு வந்து விழுது வாக்கு...

சமயத்துல நீங்களும் வெல்லலாம் கணக்கா கேள்வியும் கேக்குது ஜக்கம்மா...

You know the answer to these questions?

அப்படி விடை கண்டுபிடிக்க முடியாத கதையை சொல்லியிருக்கு.... அதை உங்களுக்கு சொல்றேன் ... விடை தெரிஞ்சா சொல்லுங்க...

முன்னொரு காலத்துல சாதாரண குடிமகனா இருந்தவனுக்கு திடீர்னு அதிஷ்டம் அடிக்க... ஒரு சமஸ்தானத்துக்கு மன்னனா ஆயிட்டாரு.

மன்னனும் அவர் சார்ந்த மக்களும் மகிழ்ச்சியான வாழ்க்கை சொகுசான வாழ்க்கையை அனுபவிக்குறாங்க... மன்னர் என்றாலே கேளிக்கை இருக்கத்தானே செய்யும்.

நாட்டியங்களும்... நவரசங்களும்... நடன மங்கைகளும் என மன்மதனின் உதவியோடு மன்னனும் நாட்களை மகிழ்ச்சி ஆக கடத்துகிறார்.

மன்னனை மகிழ்விக்க வந்த நடன மங்கையின் செயல்களால் இன்பத்தில் மிரண்டு போன மன்னன் குறிப்பிட்ட நடன மங்கையின் மீது அன்பை பொழிகிறார்...

தொழிலில் நடன மங்கையின் செல்வாக்கு உயர... மன்னனும் மதி மயங்கிபோய் இருக்கிறார்.

மன்னனின் மதி மயங்கி கிடக்கும் நேரத்தில் எதற்கும் உதவும் என மன்னனின் லீலைகளை பதிவாக்கி கொள்கிறார் மங்கை.

மங்கையின் அழகிலும், செயலிலும் இன்பத்தில் மிரண்டு போயிருந்த மன்னனுக்கு மங்கையின் பதிவு தெரியவர... நிஜமாகவே மிரண்டு போகிறார்.

சிக்கல் தீர மன்மதனை அழைக்க மிரண்ட மன்னனின் பதிவுக்கு தக்க சன்மானத்தோடு பதிவுகள் அழிக்கப்படுகிறது.

இத்தனை காலம் எத்தனையோ மகிழ்ச்சிகள் மன்னனின் வாழ்வில் நடந்தாலும் வெளியுலகில் மாண்பை குறைக்கும் பதிவுக்கு மங்கை மட்டுமே காரணமாக இருக்க முடியாது என முடிவுக்கு வரும் மன்னன் கோபம் மன்மதன் மீது திரும்புகிறது.

"இனி என் முகத்தில் விழிக்கவே கூடாது என் சமஸ்தான எல்லையில் கூட நுழைய கூடாது" என கடும் உத்தரவு பிறப்பிக்க மிரண்டு போகிறான் மன்மதன். எத்தனை சமரசம் செய்தும் மன்னன் கோபம் தணிய மறுக்கிறது.

இந்த சூழலில் இன்பத்தை கொடுத்த நடன மங்கை எதற்கும் இருக்கட்டும் என்று மன்னனின் லீலைகளை கூடுதல் பதிவு போட்டு... அதிலும் சன்மானம் பார்க்க வைகுண்டம் போகிறார்.

வைகுண்டத்தை ஆளும் ராஜாவுக்கோ சன்மானம் பெரிதில்லை பதிவைப் பார்த்து முடிவு செய்கிறேன் என்கிறான். பதிவின் சிலதை மட்டுமே பார்க்கும் வைகுண்டமும் மிரண்டு போகிறான்.

இது தெரிந்த மன்மதன், ஏற்கனவே மிரண்டவன் இன்னும் மிரண்டு போகிறான்.
விட்டால் போதும் என மன்னனின் சமஸ்தானத்தை விட்டே ஓட்டம் பிடிக்கிறான்.
இதனால் ஏற்கனவே மிரண்டு இருந்த மன்னன் மேலும் மிரண்டு போக,
மிரண்டு போன மன்னனின் மனசுக்கு ஆறுதலாக ஜால்ரா போன்ற இசை கருவிகளை வாசிக்க தெரிந்த கலைக் கூட்டம் களத்தில் இறங்குகிறது.
கலைக் கூட்டத்தின் ஜால்ரா இசையில் மன்னன் மகிழ.... மக்கள் மிரண்டு போகிறார்கள்.

இசையில் மக்கள் மிரண்டதைக் கண்ட கலைக்குழுவும் மிரண்டு போக...
ஏற்கனவே மிரண்ட மன்னன் மேலும் மிரண்டு போகிறான்.

இந்த கதையில் நிஜத்தில் "மிரண்டவன்" யார்..?

மன்னனா...?
மன்மதனா...?
மங்கையா...?
வைகுண்டமா...?
கலைக்குழுவா.... ?
மக்களா... ?

இந்த கேள்விக்கு விடை சொன்னால் போதும் என ஜக்கம்மா சொல்லி முடிக்க கதையைச் சொல்லிட்டேன்.

பதில் சொல்லுங்க...!

-கோலிவுட்கோடங்கி

பின்குறிப்பு: இந்த கதை இப்ப ஏன்னு சொல்லுங்க.... என்றும் "A"ன்னு சொல்லுங்க என்றும் கேட்பவர்களே பதிலையும் சொல்வார்கள்.

English summary
Here is a story on the recent happenings in a big production house.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil