மீண்டும் மாஸ் நடிகரிடம் தஞ்சம் புகுந்த காப்பி இயக்குநர்.. அடுத்த படத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா?
சென்னை: அந்த பெரிய நடிகரின் படம் தாமதமாகி வருவதால் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே காப்பி இயக்குநர் திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே சில வெற்றிகளை கொடுத்த நிலையில், மீண்டும் ஒரு படத்தை அந்த மாஸ் நடிகரை வைத்து இயக்கவேண்டும் என்கிற முயற்சியில் காப்பி இயக்குநர் களமிறங்கி உள்ளாராம்.
பைலிங்குவல் பட முயற்சியில் இறங்கியிருக்கும் நடிகருக்கு பான் இந்தியா படம் பண்ணும் ஐடியாவை கொடுத்துள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

சக்சஸ் இயக்குநர்
காப்பி இயக்குநர் என பெயர் எடுத்தாலும் சரியான மசாலா கலவைகளை பிரம்மாண்ட முந்திரிகளையும் தூவி கோலிவுட்டின் சக்சஸ் இயக்குநராக வலம் வருகிறார் அந்த இளம் இயக்குநர். தனது தனிப்பட்ட வளர்ச்சிக்காக வட இந்தியா பக்கம் தலை வைத்து படுத்த அந்த இயக்குநருக்கு சில ஆண்டுகளாக எந்தவொரு படமும் வெளியாகவில்லை என்பது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இழுத்தடிக்கும் நடிகர்
இந்த இயக்குநரின் இயக்கம் பிடித்துப் போய் அவருடன் நடிக்க சம்மதித்த அந்த பெரிய நடிகர் ஏகப்பட்ட சட்ட சிக்கல்களில் மாட்டித் தவித்து வருகிறார். அதன் காரணமாக படப்பிடிப்புகளை ரொம்பவே தாமதம் செய்து வருவது இந்த இளம் இயக்குநரை சில ஆண்டுகளாக பெரிய பாதிப்பில் ஆழ்த்தி உள்ளது.

புறப்பட்ட இடத்துக்கே
பெரிய கனவுகளோடு விமானம் ஏறிச்சென்ற இயக்குநர் நேர விரையம் ஆவதை அறிந்து மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே பெட்டியைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டாராம். அந்த சந்தோஷத்தில் தான் மனைவி நடிகை புதிய புதிய புகைப்படங்களை வெளியிட்டு சந்தோஷப்பட்டு வந்தார்.

மாஸ் நடிகரிடம் தஞ்சம்
அடுத்தடுத்த இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்து விட்டு வரும் அந்த மாஸ் நடிகரை மீண்டும் சந்தித்து தஞ்சம் புகுந்துள்ளாராம் அந்த காப்பி இயக்குநர். இருவரும் சமீபத்தில் சந்தித்த நிலையில், இன்னொரு கதை உங்களுக்காக ரெடி பண்ணியிருக்கேன் கொஞ்சம் கேளுங்க என சொல்ல அவரும் செவிக் கொடுத்து கேட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

விரைவில் அறிவிப்பு
பைலிங்குவல் படத்தில் அடுத்ததாக ஆர்வம் செலுத்தி வரும் மாஸ் நடிகர் இந்த இளம் இயக்குநரை வைத்து பான் இந்தியா படம் ஒன்றை உருவாக்க ஆலோசித்து வருகிறாராம். இந்தி மார்க்கெட்டை குறிவைத்து அந்த படம் உருவாகும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











