»   »  சுயசரிதை-பெண் டாக்டருக்கு ரஜினி பாராட்டு!

சுயசரிதை-பெண் டாக்டருக்கு ரஜினி பாராட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Gayathri with Rajini
தனது வாழ்க்கைக் கதையை நூலாக வடித்துள்ள சென்னை பெண் டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த்தை ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த், சென்னையின் பிரபலமான கண் மருத்துவர்களில் ஒருவர். இவர் ரஜினிகாந்த்தின் வாழ்க்கை வரலாற்றை ரஜினி பேரைக் கேட்டாலே என்ற பெயரில் தமிழிலும், தி நேம் ஆப் ரஜினிகாந்த் என்ற பெயரில் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.

ரஜினியின் பிறந்த ஊரான பெங்களூரில் ஒரு வருடம் தங்கி ரஜினி தொடர்பான பல்வேறு தகவல்களையும் திரட்டி இந்த நூலை உருவாக்கியுள்ளார் காயத்ரி.

இந்தப் புத்தகத்தை ஓம் புக்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடவுள்ளது.

புத்தகத்ைத எழுதி முடித்தவுடன் ரஜினியிடம் அதைக் காட்டி படிக்கச் சொல்லி ஒப்புதல் பெற்றாராம் காயத்ரி. புத்தகத்ைதப் படித்துப் பார்த்த ரஜினி, காயத்ரியை தனது வீட்டுக்கு வரவழைத்து அவரைப் பாராட்டினாராம்.

மார்ச் 1ம் தேதி இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிகள், தமிழ்த் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

ரஜினியின் நெருங்கிய நண்பரும், கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகில் ரஜினியுடன் சேர்த்து இரு பெரும் இமயங்களாக விளங்குபவர்களில் ஒருவருமான கமல்ஹாசனும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

முதல்வர் கருணாநிதியையும் விழாவுக்கு வரவழைக்க முயற்சிகள் நடப்பதாக தெரிகிறது. இதுதொடர்பாக புத்தக வெளீட்டாளர் தரப்பில் முதல்ரை அணுகி சிறப்பு விருந்தினராக வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.

இந்த புத்தகத்தின் முன்னுரையை முதல்வர் கருணாநிதியும், கமல்ஹாசனும் எழுதியுள்ளனர்.

இந்தியத் திரையுலகின் முப்பெரும் சூப்பர் ஸ்டார்களான அமிதாப் பச்சன், ரஜினி, கமல் ஆகியோர் ஒரே விழாவில் பங்கேற்பதால் இந்த நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.

டாக்டர் காயத்ரியின் தந்தை நடராஜனும் ஒரு பிரபல மருத்துவர். 1974ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி பிறந்தவர் டாக்டர் காயத்ரி.

டாக்டர் நடராஜன், நீலகிரி, திருப்பூர் பகுதிகளில் பிரபலமான பல் மருத்துவர் ஆவார். டாக்டர் காயத்ரி தற்போது சென்னை தி.நகரில் உள்ள டாக்டர் துரைசாமி கண் மருத்துவமனையில், கண் மருத்துவ ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். கண் சிகிச்சை முகாம்களுக்கான பொறுப்பாளராகவும் செயல்படுகிறார்.

இவரது கணவர் டாக்டர் ஸ்ரீகாந்த்தும், கண் அறுவைச் சிகிச்சை மருத்துவர்தான். ரஜினியின் தீவிர விசிறியாக இருந்த காயத்ரி, அவரது வாழ்க்கை வரலாற்றை எழுத தீர்மானித்ததற்கு முக்கிய காரணம், ரஜினியின் வாழ்க்கையில் அவர் சந்தித்த பல்வேறு போராட்டங்களும், அதைத் தொடர்ந்து அவருக்குக் கிடைத்த வெற்றிகளும்தான். இன்றைய இளைஞர்களுக்கு இது நல்ல பாடமாக இருக்கும் என்பதால்தான் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை எழுத அவர் தீர்மானித்தாராம்.

காயத்ரியின் இந்த முயற்சிகளுக்கு அவரது கணவர் ஸ்ரீகாந்த்தும் உற்ற துணையாக இருந்து இந்த நூல்கள் உருவாக காரணமாக இருந்துள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil