twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'அசல்' விழா: அஜீத்தை வாழ்த்திய ரஜினி!

    By Staff
    |

    Rajini with Ajith
    தமிழ் சினிமாவில் சரித்திரம் படைத்த சந்திரமுகிக்குப் பிறகு சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கும் பிரமாண்டப் படம் 'அசல்'.

    அஜீத் நடிக்கும் இந்தப் படத்தின் துவக்க விழா இன்று காலை, சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தில் நடந்தது. திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்திய இந்த துவக்க விழாவின் சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்று வாழ்த்தினார்.

    படத்தின் ஹீரோ அஜீத்தை வாழ்த்திய ரஜினி, பின்னர் பேசியதாவது:

    "நண்பர் வைரமுத்து சொன்னதுபோல, இந்த அரண்மனையிலிருந்துதான் அந்த நடிப்புச் சக்கரவர்த்தி பாலும் பழமும், பாசமலர், திருவிளையாடல் போன்ற காவியங்களில் நடிக்கப் புறப்பட்டுப் போயிருப்பார். அந்த மாமனிதர் வாழ்ந்த அன்னை இல்லத்துக்கு வந்து போவது என் மனதுக்கு உகந்த விஷயம். இந்த அன்னை இல்லம் தென்னாட்டு திரையுலகுக்கே தாய்வீடு!.

    இத்தனை ஆண்டுகளில் நானும் செளந்தர்யாவும் ஒன்றாக சேர்ந்து எந்தப் பட விழாவுக்கும் போனதில்லை. அதனால் நேத்தே சௌந்தர்யாகிட்டே சொல்லிட்டேன், நாளைக்கு நாம முதல் ஆளா அசல் பட பூஜைக்குப் போகலாம் என்று.

    சந்திரமுகி படத்துக்கும் இங்குதான் பூஜை போட்டோம், ஆனா சிம்பிளாக. இப்போது அசல் படத்துக்கு நல்ல பிரமாண்டமாக அதே இடத்தில் பூஜை போடுகிறார் பிரபு. இது எந்த அளவு வெற்றிப் படமாக வரும் என்பதற்கு இந்த பூஜையே ஒரு சாட்சி.

    ராம்குமார் மற்றும் பிரபு இருவருமே மிக அற்புதமான தயாரிப்பாளர்கள். இப்படித்தான் இருக்கணும். தங்கள் தந்தையின் புகழை, பெருமையை, இந்தக் குடும்பத்தின் பெயரை அப்படியே காத்து வருகிறார்கள். அது பெரிய விஷயம். என் பசங்களுக்கு அடிக்கடி சொல்வேன், இவர்களைப் போல வரணும், பெரியவங்களை மதிக்கக் கத்துக்கணும்னு.

    சந்திரமுகி படம் எடுத்தப்போ, என்னைவிட அதிக டென்ஷன் ஆனவர்கள் ராம்குமார்-பிரபுதான். பாபா சரியா போகாத அந்த சூழ்நிலையில் படம் பண்ணுகிறோம்.

    'அண்ணே, இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும், நாங்க பாத்துக்கறோம். நீங்க கவலைப்படாதீங்கன்'னு சொல்லி அருமையாக தயாரித்து, பிரமாண்ட வெற்றி பெற வைத்தார்கள்.

    அதற்குப் பிறகு அஜீத்தை வைத்து இந்தப் படம் தயாரிக்கிறார்கள். நிச்சயம் இது வெற்றி பெறும். அஜீத்துக்கும் இப்போது ஒரு வெற்றி தேவை. அஜீத்.. கவலைப்படாதீங்க, நல்ல இடத்துக்கு வந்திருக்கீங்க. நல்ல வெற்றியைப் பெறுவீங்க. நிச்சயம் இந்தப் படத்தின் வெற்றி விழாவில் நான் இருப்பேன்.

    இந்தப் படத்தின் இயக்குநர் சரண், கமர்ஷியல் அண்ட் க்ளாஸ் ரக படங்களைத் தருவதில் கைதேர்ந்தவர். மிகப் பெரிய வெற்றி பெறும். வாழ்த்துக்கள் என்றார் சூப்பர் ஸ்டார்.

    விழா முடிந்து அஜீத்துடன் சில நிமிடங்கள் பேசிவிட்டு, மின்னலாய் கிளம்பினார் ரஜினி.

    விழாவில் பேசிய வைரமுத்து, "திரையுலகில் பாரம்பரியத்தையும் பழைய உறவுகளையும் நினைத்துப் பார்ப்பதே அபூர்வமாகிவிட்ட இந்த நாளில், பிரபுவும் ராம்குமாரும், தங்கள் தந்தையின் பெருமையையும், பாரம்பர்யத்தையும், அவரது பழைய உறவுகளையும் மறக்காமல் தேடி வந்து சிறப்பிப்பது மகிழ்ச்சியளிக்கிறது", என்றார்.

    தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, எவி எம் சரவணன், இயக்குநர்கள் கே பாலச்சந்தர், சரண் உள்ளிட்ட பலரும் பேசினர். பிரபுவும் ராம்குமாரும் நன்றி கூறினர்.

    இந்த விழாவால் தி.நகர் போக் ரோடு பகுதியே ரசிகர் வெள்ளமாகக் காட்சியளித்தது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X