»   »  சஞ்சய் தத்துக்கு 3வது கல்யாணம்?

சஞ்சய் தத்துக்கு 3வது கல்யாணம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
Sanjay Dutt with Manayata
தனது காதலி மான்யதாவை நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக பாலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.

பாலிவுட்டில் புகழ் பெற்ற சுனில் தத் - நர்கீஸ் தத் தம்பதிகளின் மகன் சஞ்சய் தத். இளம் வயதிலேயே பாலிவுட்டில் புகழ் பெற்ற நடிகராக உருவெடுத்த சஞ்சய் தத் பின்னர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக பல காலம் முடங்கிப் போனார்.

பின்னர் அதிலிருந்து மீண்டு மறுபடியும் நடிப்பில் பிசியான நிலையில் மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கினார்.

இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சஞ்சய் தத் தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ளார். இந்த நிலையில் தனது காதலி மான்யதாவை அவர் ரகசிய கல்யாணம் செய்து கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

சஞ்சய் தத் ஏற்கனவே 2 முறை திருமணமானவர். இரு திருமணமும் அவருக்கு நிலைக்கவில்லை. இந்த நிலையில் அவருக்கு உற்ற துணையாக மான்யதா இருந்து வந்தார்.

இருவரும் திருமணம் செய்து கொண்டதாக பலமுறை செய்திகள் வந்தன. ஆனால் அதை இருவருமே மறுத்து வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் இரு வீட்டார் முன்னிலையில் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக புதுச் செய்தி வந்துள்ளது. இதை இருவருமே இம்முறை மறுக்கவில்லை என்பதால் கல்யாணச் செய்தி உண்மையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil