twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரமாண்ட மர்மயோகி - கமல்

    By Staff
    |

    Kamal
    7வது நூற்றாண்டைப் பின்னணியாகக் கொண்ட கதைக்களத்துடன் கூடிய மர்மயோகி வித்தியாசமான ஒரு முயற்சி. பிரமாண்டமான வரலாற்றுப் படமாக இது உருவாகவுள்ளது என்று உலக நாயகன் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    கலைத் தாகத்தோடு திரையுலகை வலம் வந்து கொண்டிருக்கும் கமல்ஹாசன், தசாவதாரத்தை முடித்த கையோடு மர்மயோகிக்குப் போய் விட்டார். அது தொடர்பான பூர்வாங்கப் பணிகளில் மும்முரமாக இருக்கும் கமல்ஹாசன், தனது மர்மயோகி எப்படிப்பட்ட படம் என்பதை விளக்கியுள்ளார்.

    இது மிகப் பிரமாண்டமான படமாக இருக்கும். முற்றிலும் வரலாற்று கதை. தசாவதாரத்தை விட இந்தப் படத்தில் இசை முக்கியத்துவம் உடையதாக இருக்கும்.

    7வது நூற்றாண்டில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்கள்தான் கதையின் கரு.

    இது வரலாறும், அறிவியலும் கைகோர்க்கும் படமாக இருக்காது. முற்றிலும் வித்தியாசமான முயற்சி. ஏ.ஆர்.ரஹ்மானின் இசை சேவைக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. அவரது விருப்பத்திற்கேற்ப இதில் இசையமைக்கும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.

    ஆரம்பத்தில் பட்ஜெட் ரூ. 100 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. இப்போது அதையும் தாண்டிப் போய் விட்டது. இந்திய திரையுலக வரலாற்றில் இது புதிய சாதனை படைக்கும். ஆகஸ்ட் மாதம் பிரமாண்டமான முறையில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

    மர்மயோகி குறித்து மீடியாக்களில் நிறைய செய்திகள் வருகின்றன. அவை அனைத்தையும் நான் மறுக்க மாட்டேன், மீடியா நண்பர்களை ஏமாற்ற மாட்டேன்.

    மீடியாக்களில், மும்பையில் பிரமாண்டமான முறையில் தொடக்க விழா இருக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது. உண்மையில் முதலில் அப்படி ஒரு திட்டமே என்னிடம் இல்லை. ஆனால் இப்போது மீடியாக்களில் வந்துள்ளதைப் போலவே, பாலிவுட் நட்சத்திரங்களுக்கு மத்தியில் பிரமாண்டமான முறையில் மர்மயோகியின் தொடக்க விழா இருக்கும்.

    தசாவதாரம் குறித்து இரு வித கருத்துக்கள் நிலவுகின்றன. அப்படத்தில் சில தவறுகள் இருப்பதை ஒப்புக் கொள்கிறேன். அதை நான் மறைக்க விரும்பவில்லை. ஆனால் அனைத்து திறமையாளர்களுக்கும், கலைஞர்களுக்கும் ஏற்படக் கூடிய ஒன்றுதான் இது. அது எனக்கும் ஏற்பட்டுள்ளது. அவ்வளவுதான்.

    உண்மையில் இந்தத் தவறுகளை அடுத்து படத்தில் திருத்திக் கொள்ள எனக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்றார் கமல்ஹாசன்.

    கமலை மட்டும் பார்த்தால் குறைகள் தெரியாது!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X