twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யு.எஸ்.போகும் ரஜினி, ஷங்கர்

    By Staff
    |

    Rajini with Shankar
    குசேலன் படத்தை கிட்டத்தட்ட முடித்து விட்ட ரஜினிகாந்த், தனது அடுத்த படமான ரோபோட் தொடர்பான பணிகளுக்காக இயக்குநர் ஷங்கருடன் அமெரிக்காவுக்குப் பறக்கவுள்ளார்.

    குசேலன் படத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டது ரோபோட். இந்த நிலையில் அதற்கு முன்பாக ஒரு படத்ைதக் கொடுக்க முடிவு செய்த ரஜினி, செலக்ட் செய்த கதைதான் குசேலன்.

    இப்போது குசேலன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையப் போகிறது. இதையடுத்து ரோபோட் படத்திற்குத் திரும்புகிறார் ரஜினி.

    முதல் கட்டமாக மேக்கப் டெஸ்ட் உள்ளிட்டவற்றை மேற்கொள்வதற்காக அவரும், இயக்குநர் ஷங்கரும் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளனர்.

    ரூ. 130 கோடி செலவில் ரோபோட் உருவாகவுள்ளது. இதில் ரஜினியின் மேக்கப் டெஸ்ட் மற்றும் அவரை புதிய தோற்றத்திற்கு மாற்றுவதற்காக மட்டும் ரூ. 3 கோடி செலவிடப்படவுள்ளதாம். ஹாலிவுட்டில் வைத்து ரஜினியை புத்தம் புதுத் தோற்றத்திற்கு மாற்றி மெருகேற்றவுள்ளனர்.

    இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளார். இப்படத்துக்காக 6 மாத கால்ஷீட் கொடுத்துள்ளார். அவரது சம்பளம் மட்டும் ரூ. 6 கோடியாகும்.

    அய்ங்கரன் மற்றும் ஈராஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் பிரமாண்டப் படத்ைத தயாரிக்கவுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

    கடந்த பிப்ரவரி மாதம் இப்படத்திற்கான முதல் போட்டோ ஷூட் நடந்தது. ரஜினியை பல்வேறு கோணங்களில், சென்னையின் பிரபல பேஷன் மற்றும் போர்ட்போலியோ புகைப்படக் கலைஞர் வெங்கட் ராம் ஷூட் செய்தார்.

    பின்னர் இந்தப் படங்களை, ஷங்கரின் ஆலோசனைப்படி ரஜினியின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் தனது ஆக்கர் ஸ்டுடியோவில் வைத்து ரீ டிசைன் செய்தார்.

    ரோபோட்டுக்காக மாறும் ஜெமினி லேப்:

    இதற்கிடையே ரோபோட் படத்துக்காக சென்னையின் பிரபலமான ஜெமினி கலர் லேப் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டு, அதி நவீன ஸ்டுடியோவாக எழும்பவுள்ளது.

    தென்னிந்தியாவின் மூத்த, முன்னணி லேப்களில் ஜெமினியும் ஒன்று. இந்த லேபில் தற்போது உலகின் அதி நவீன வசதிகள் இல்லை. ரோபோட் படம் முழுக்க முழுக்க கிராபிக்ஸை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படவுள்ளது. மேலும், ஷூட்டிங்குக்குப் பின்னர், பல்வேறு அதி நவீன வசதிகளும் தேவைப்படும்.

    ஆனால் இந்தியாவில் இந்த வசதிகள் சரிவர இல்லை. ஒவ்வொரு ஊரிலும் ஒரு சில வசதிகள்தான் உள்ளன. எனவே ரோபோட் படத்திற்கான போஸ்ட் புரடக்ஷன் வேலைகளை ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் செய்ய வேண்டும் என்று யோசித்த ஷங்கர், இதுகுறித்து ஜெமினி லேபுடன் பேசியுள்ளார்.

    ஜெமினி லேபில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த முடியுமா என்று அவர் கேட்க, ரோபோட்டுக்காக இதை செய்து விட்டால் போச்சு என்று, லேபை முற்றிலும் புத்தம் புதுப் பொலிவுடன் கூடியதாக மாற்ற அதன் இயக்குநர்கள் தீர்மானித்தனர்.

    இதன் விளைவாக ஜெமினி லேப் முற்றிலும் இடித்துத் தள்ளப்பட்டு வெளிநாடுகளில் உள்ள அனைத்து அதி நவீன வசதிகளும் இடம் பெற்றிருக்கும் வகையிலான அல்ட்ரா மாடர்ன் லேபை கட்டவுள்ளனர்.

    புதிதாக உருவாகவுள்ள லேபில், அத்தனை அதி நவீன வசதிகளும் இருக்குமாம். படத்தை முடித்த பின்னர் அனைத்துப் பணிகளையும் இங்கேயே முடித்துக் கொள்ளும் அளவுக்கு பக்காவாக இருக்குமாம்.

    புதுப்பித்துக் கட்டப்படவுள்ள லேபை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் திறந்து வைக்கவுள்ளாராம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X