»   »  ஸ்ரீகாந்த் பிசி, பிசி!

ஸ்ரீகாந்த் பிசி, பிசி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Srikanth with Vandana

கல்யாண கலாட்டா முடிவுக்கு வந்து சந்தோஷமாக இல்லற வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் ஸ்ரீகாந்த் கை நிறையப் படங்களுடன், மனசு நிறைய திருப்தியுடன் படு பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கிலும் ஒரு படம் செய்கிறாராம்.

வந்தனாவுடன் சந்தோஷ சம்சார சாகரத்தில் மூழ்கியிருக்கும் ஸ்ரீகாந்த் கைவசம் இப்போது நிறையப் படங்களாம். தமிழில் தனக்கு பெரும் வாழ்வு அளித்த சசியின் இயக்கத்தில் பூ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீகாந்த்.

சசியின் ரோஜாக்கூட்டம்தான், ஸ்ரீகாந்த்தின் முதல் தமிழ்ப் படம். அதுவரை தெலுங்கில் நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீகாந்த், ரோஜாக்கூட்டம் மூலம் தமிழ் ரசிகர்களையும் ஈர்த்தார்.

இப்போது கல்யாணத்திற்குப் பின்னர் பெரிய பிரேக்கை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்ரீகாந்த்துக்கு பூ படம் மூலம் இன்னொரு பிரேக் கிடைக்கும் என பூ வட்டாரமே பூரிப்புடன் கூறுகிறது.

தற்போது பூ பட ஷூட்டிங்குக்காக ராஜபாளையம் அருகே முகாமிட்டுள்ள ஸ்ரீகாந்த், இப்படம் எனக்கு பெரும் திருப்புமுனையைக் கொடுக்கும். இந்தப் படத்துக்காக 8 மாத கால டைம் எடுத்துக் கொண்டார் சசி. பார்த்து பார்த்து ஒவ்வொரு காட்சியையும் அவர் எடுத்து வருகிறார். ஒவ்வொரு காட்சியும் எப்படி அமையும் என்பதை நன்றாக திட்டமிட்டு செய்கிறார். எனவே இந்த பூ, ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் என்கிறார் நம்பிக்கையுடன்.

இதேபோல எட்டப்பன் படமும் தனக்கு நல்ல பெயரைத் தரும் என்கிறார் ஸ்ரீகாந்த். இப்படத்தில் ஸ்ரீகாந்த்துக்கு ஜோடியாக மலையாளத்து பார்வதி மெல்டன் ஜோடி சேர்ந்துள்ளார்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து இந்திரவிழி என்ற புதிய படத்தில் நடிக்கவுள்ளார் ஸ்ரீகாந்த். இப்படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி மாதம் தொடங்குகிறது.

இப்படம் இன்னொருவருக்கு கம் பேக் மூவி ஆக இருக்கிறது. அவர் இயக்குநர் டி.வி. ராஜேஷ்வர். கார்த்திக்குக்கு பிரேக் கொடுத்த அமரன் படத்தை இயக்கியவர் ராஜேஷ்வர். அதேபோல நெப்போலியனுக்கு பிரேக் கொடுத்த சீவலப்பேரி பாண்டியை இயக்கியவர்.

நீண்ட காலமாக காணாமல் போயிருந்த ராஜேஷ்வர், இப்போது இந்திரவிழி மூலம் திரும்பி வருகிறார். இந்தப் படத்தையும் ஸ்ரீகாந்த் பெரிதும் எதிர்பார்க்கிறார்.

இது போக ஒரு தெலுங்குப் படத்திலும் நடிக்கவுள்ளாராம் ஸ்ரீகாந்த். இதில் அவருடன் பிருத்விராஜும் இணைந்து நடிக்கிறார். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறாராம் ஸ்ரீகாந்த்.

இந்தப் படங்கள் வரிசையாக வந்து தொய்ந்து போயுள்ள எனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் என படு தெம்பாக கூறுகிறார் ஸ்ரீகாந்த்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil