»   »  அன்புமணி கோரிக்கை: ஷாருக் நிராகரிப்பு

அன்புமணி கோரிக்கை: ஷாருக் நிராகரிப்பு

Subscribe to Oneindia Tamil
Shahrukh Khan with wife Gowri
திரைப்படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதா, கூடாதா என்பது படைப்புரிமை சம்பந்தப்பட்டது. இதில் அரசு தலையிட முடியாது என்று கூறி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸின் கோரிக்கையை ஷாருக் கான் நிராகரித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் நடிகர்கள் சினிமாக்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க கூடாது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்து வருகிறார்.

இதை ஏற்று நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சிம்பு உள்ளிட்ட தமிழக நடிகர்கள் தங்களது படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெறாத வகையில் பார்த்துக் கொள்கின்றனர்.

ஆனால் பாலிவுட் நடிகர்கள் அன்புமணியின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறி வருகின்றனர்.

ஓரிரு நாட்களுக்கு முன்பு அமிதாப் பச்சன், ஷாருக் கான் போன்ற சூப்பர் ஸ்டார் நடிகர்கள் தங்களது படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று மீண்டும் அன்புமணி கோரிக்ைக விடுத்திருந்தார்.

அதற்கு அமிதாப் பச்சன் இதுவரை பதிலளிக்கவில்லை. ஆனால் ஷாருக்கான், அன்புமணியின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

ஷாருக்கானின் திரைப் பங்களிப்புக்குப் பாராட்டு தெரிவித்து அவருக்கு பிரான்ஸ் அரசு வழங்கிய Insignia of Officer in the Order of Arts and Letters விருது வழங்கும் விழா மும்பையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட ஷாருக் கானுக்கு, இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதர் விருதினை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஷாருக் கான் பேசுகையில், புகைப் பிடித்தல் தொடர்பாக அன்புமணியின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று தெரிவித்தார். அவர் பேசுகையில், இது படைப்பாளிகளின் கருத்து சுதந்திரம். இதில் யாரும் தலையிட முடியாது. இப்படி நடிக்காதீர்கள் என்று நடிகர்களிடம் யாரும் கட்டளை போட முடியாது.

சினிமா என்பது படைப்பாளிகளின் களம். இங்கு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது.

இளம் வயதினர் அதிக அளவில் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகிறார்கள் என்ற அமைச்சர் அன்புமணியின் கவலையில் நானும் பங்கு கொள்கிறேன். இருப்பினும் படைப்பாளிகளின் சுதந்திரத்திற்கு எல்லை வரையறுக்க முடியாது என்றே கருதுகிறேன் என்றார் ஷாருக் கான்.

அமிதாப், ஷாருக்-அன்புமணி கோரிக்கை

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil