»   »  40 நாள் 'தளபதி' தீபாவளி கொண்டாடிய ஆந்திரா கிராமம்

40 நாள் 'தளபதி' தீபாவளி கொண்டாடிய ஆந்திரா கிராமம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பதி: விஜய் தங்களுடன் தங்கியிருந்த 40 நாட்களும் தீபாவளி தான் என்று ஆந்திரா கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் புலி. புலி படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலத்தில் உள்ள தலக்கோணம் பகுதியில் நடைபெற்றது.

தலக்கோணத்தில் பல கோடி செலவில் செட் போட்டு படப்பிடிப்பை நடத்தினர்.

திருப்பதி

திருப்பதி

தலக்கோணத்தில் காட்டுப்பகுதியில் கிராமம் போன்று செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அங்கு படப்பிடிப்பு நடந்தபோது விஜய் மற்றும் படக்குழுவினர் திருப்பதியில் தங்கினர். தினமும் காலை 4 மணிக்கு எழுந்து 3 மணிநேரம் பயணம் செய்து படப்பிடிப்பு தளத்திற்கு சென்று வந்தனர்.

கிராமம்

கிராமம்

தினமும் 3 மணிநேரம் பயணம் செய்து காட்டுப் பகுதிக்கு செல்ல படக்குழுவினர் சிரமப்பட்டனர். இந்நிலையில் விஜய் செட் அமைக்கப்பட்ட இடத்திற்கு அருகே நடுக்காட்டில் 25 வீடுகள் மட்டும் உள்ள கிராமத்தில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

விஜய்

விஜய்

விஜய் படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு மாலை அந்த கிராமத்திற்கு வந்து தனியாக இருக்காமல் கிராமவாசிகளுடன் பொழுதை கழித்துள்ளார். அவர்களுடன் சிரித்துப் பழகி விளையாடியுள்ளார்.

தீபாவளி

தீபாவளி

விஜய் அந்த கிராமத்தில் 40 நாட்கள் தங்கியிருந்திருக்கிறார். விஜய் தங்களுடன் தங்கிய 40 நாட்களும் தீபாவளி போன்று மகிழ்ச்சியாக இருந்ததாக கிராமவாசி ஒருவர் தெரிவித்துள்ளார். விஜய் போன்ற பெரிய ஸ்டார் தங்களுடன் தங்கியதை அந்த கிராமவாசிகள் பெருமையாக நினைக்கிறார்கள்.

English summary
A village in Andhra celebrated Thalapathy Diwali for 40 days. Actor Vijay stayed in a village for 40 days while shooting for Puli. Those village people consider the 4 days with Vijay as diwali.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil