இனிமே என் பேரு அபி சரவணன் இல்ல.. விஜய் விஷ்வா.. திடீரென பெயரை மாற்றிய நடிகர்!
சென்னை: நடிகர் அபி சரவணன் தனது பெயரை திடீரென மாற்றியுள்ளார்.
அட்டக்கத்தி, குட்டி புலி ஆகிய படங்களில் அன்கிரெடிட்டட் ரோலில் நடித்தவர் அபி சரவணன். கேரள நாட்டிளம் பெண்களுடனே என்ற படத்தின் உன்னிகிருஷ்ணன் என்ற கதா பாத்திரத்தில் நடித்தார்.
தொடர்ந்து டூரிங் டாக்கிஸ், சாஹசட். பட்டதாரி. பிகில், மாயநதி ஆகிய படங்களில் நடித்தார்.

சாயம் என்ற படத்தில்
தற்போது பிளஸ் ஆர் மைனஸ், அந்த ஒரு நாள், நாடகம் உள்ளிட்ட சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். மேலும் சாயம் என்ற படத்திலும் கமிட் ஆகியுள்ளார் அபி சரவணன்.

ஷைனி ஹீரோயின்
இந்தப் படம் அரசியல் படமாக உருவாகிறது. இப்படத்தை புதுமுக இயக்குநர் ஆண்டனி இயக்குகிறார். நடிகை ஷைனி இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தில், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

விஜய் விஷ்வா..
இந்நிலையில் நடிகர் அபி சரவணன் தனது பெயரை திடீரென மாற்றியுள்ளார். அதாவது தனது பெயரை விஜய் விஷ்வா என மாற்றிக்கொண்டுள்ளார். சினிமா நட்சத்திரங்கள் தங்களின் பெயரை மாற்றிக்கொள்வது இது ஒன்றும் முதல் முறையல்ல.

நடிகர் தனுஷ்
இதேபோல் நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் குமார் சில படங்களுக்கு பிறகு தனது பெயரை அருண் விஜய் என மாற்றிக் கொண்டார். இதேபோல் நடிகர் தனுஷ், வெங்கட் பிரபு என்ற பெயரை சினிமாவுக்காக தனுஷ் என மாற்றிக்கொண்டார்.

நடிகை நயன்தாரா
மேலும் நடிகர் சூர்யா, சரவணன் என்ற பெயரை சினிமாவுக்காக மாற்றிக்கொண்டார். லக்ஷ்மி ராய் தனது என்ற பெயரை ராய் லக்ஷ்மி என மாற்றிக் கொண்டார். தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வரும் நயன்தாராவும் டயானா மரியம் குரியன் என்ற தனது பெயரை சினிமாவுக்காக மாற்றிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அபி சரவணன்
தங்களின் ராசிப்படியும் நியூமராலஜி படியும் சினிமா பிரபலங்கள் தங்களின் பெயர்களை மாற்றி வருகின்றனர். அந்த வகையில் இதுவரை சினிமாவில் பெரிதாக பெயர் சொல்லும்படியான படத்தை கொடுக்க முடியாத நடிகர் அபி சரரவணன் தனது பெயரை விஜய் விஷ்வா என மாற்றியுள்ளார்.


Click it and Unblock the Notifications











