உண்மைதானே... ஊ சொல்றியா பாடல் குறித்து ஒரே வார்த்தையில் பதில் கூறிய நடிகர் அல்லு அர்ஜூன்!

சென்னை: புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள ஊ சொல்றியா பாடல் குறித்து நடிகர் அல்லு அர்ஜூன் ஒரே வார்த்தையில் பதில் அளித்துள்ளார்.

Recommended Video

தப்பா பேசினாலும் தமிழ்ல தான் பேசுவேன் | Pushpa Tamil pressmeet

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள படம் புஷ்பா. இந்த படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் நடைபெறும் செம்மரக்கடத்தலை மைய்யப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. புஷ்பா திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது.

17 ஆம் தேதி ரிலீஸ்

17 ஆம் தேதி ரிலீஸ்

இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாகம் வரும் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

ஊ அண்டாவா மாவா..

ஊ அண்டாவா மாவா..

புஷ்பா படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்தப்பாடலின் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியானது. தெலுங்கில் "ஊ அண்டாவா மாவா.. ஊஊ அண்டாவா மாவா" என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன.

அலையிற புத்தி

அலையிற புத்தி

தமிழிலும் இந்த பாடல் 'ஊ சொல்றியா மாமா.. ஊஊ சொல்றியா மாமா' என்கிற வரிகளைக் கொண்டு வெளியாகியுள்ளது. தமிழில் இந்த பாடலை ஆண்ட்ரியா பாடியுள்ளார். விவேகா இந்த பாடலை எழுதியுள்ளார். இந்தப் பாடலில், ஒரு பெண் என்ன நிறம், உயரம், தோற்றமாக இருப்பினும் ஆண்களின் புத்தி அலையிற புத்தி என்ற வரிகள் உள்ளன.

ஆண்கள் சங்கம் எதிர்ப்பு

ஆண்கள் சங்கம் எதிர்ப்பு

இதனால் இந்தப் பாடலுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. அனைத்து ஆண்களையும் இந்த பாடல் தவறாக சித்தரிப்பதால், இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு ஆண்கள் சங்கத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். பாடலை தடை செய்ய வேண்டும் என்றும் இல்லையெனில் சமந்தா உள்ளிட்ட படக்குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் கருத்து என்ன?

உங்கள் கருத்து என்ன?


இந்நிலையில் இப்படத்தின் பிரஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் அல்லு அர்ஜூ, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது ஓ சொல்றியா பாடல் குறித்து ஒரு ஆணாக உங்கள் கருத்து என்ன என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

ஒரே வார்த்தையில் பதில்

ஒரே வார்த்தையில் பதில்

அதற்கு பதில் கூறிய அல்லு அர்ஜூன் உண்மைதானே என்று ஒற்றை வார்த்தையில் பதில் கூறினார். அல்லு அர்ஜூன் பதில் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனிடையே 'ஊ சொல்றியா'பாடலில் நான் எங்கும் ஆண்களைத் திட்டவில்லை: ஆந்திராவில் விளம்பரத்திற்காக எதிர்க்கிறார்கள். ஆனால், தமிழர்கள் பாடலைக் கொண்டாடுகிறார்கள்" என பாடலாசிரியர் விவேகா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X