கொரோனாவின் அடுத்த குறி டோலிவுட்டா...சிரஞ்ஜீவிக்கு கொரோனா பாசிடிவ்

ஐதராபாத் : நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக திரையுலகை சேர்ந்த பலரும் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கமல்ஹாசன், வடிவேலு, சத்யராஜ், அருண் விஜய், த்ரிஷா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், மீனா என அடுத்தடுத்து பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். கோலிவுட்டை தொடர்ந்து மலையாள திரையலகை சேர்ந்த மம்முட்டி, சுரேஷ்கோபி, துல்கர் சல்மான், ஜெயராம் என பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

சிரஞ்சீவிக்கு கொரோனா

சிரஞ்சீவிக்கு கொரோனா

இந்நிலையில் இன்று தனக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், லேசான அறிகுறிகளுடன் எனக்கு நேற்று இரவு கொரோனா தொற்று உறதி செய்யப்பட்டது. வீட்டு தனிமையில் இருந்து வருகிறேன்.

விரைவில் சந்திக்கிறேன்

விரைவில் சந்திக்கிறேன்

கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். விரைவில் அனைவரையும் சந்திக்கிறேன் என சிரஞ்சீவி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆச்சார்யா ஷுட்டிங்கில் பிஸி

ஆச்சார்யா ஷுட்டிங்கில் பிஸி

தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னட மொழி படங்களில் சுமார் 150 க்கும் அதிகமான படங்களில் சிஞ்சீவி நடித்துள்ளார். சிரஞ்சீவி தற்போது ஆச்சார்யா, காட்ஃபாதர், போலோ ஷங்கர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மெகா பட்ஜெட்டில் தயாராகி வரும் ஆச்சார்யா படத்தின் ஷுட்டிங்கில் சிரஞ்சீவி பிஸியாக இருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து

ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து

சிரஞ்சீவியின் மகன் ராம்சரண், சகோதரர் பவன் கல்யாண் ஆகியோரும் தெலுங்கில் டாப் ஹீரோக்களாக இருந்து வருகின்றனர். சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதை அறிந்த அவரது தீவிர ரசிகர்கள், அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X