Just In
- 5 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 5 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 7 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 8 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- News
அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. அரசு மற்றும் அரசியல் குறித்து ஒன்றைரை மணி நேரம் பேச்சு..!
- Automobiles
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Lifestyle
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
20 வருஷமா நீங்க தான் என் க்ரஷ்.. படு ரொமான்ஸாய் ட்வீட் போட்ட ரசிகை.. மாதவனின் பதில் என்ன தெரியுமா?
சென்னை: அலைபாயுதே படத்தில் ஆரம்பித்த 'மேடி' கிரேஸ் மற்றும் மாதவன் மீதான க்ரஷ் இன்னும் போகவில்லை.
பெண்கள் நெஞ்சை கொள்ளைக் கொள்ளும் வெள்ளை மாதவா என பாடியது போலவே, தற்போது ஒரு ரசிகை மாதவனுக்கு போட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.
அந்த ட்வீட்டுக்கு அவர் அளித்த பதில் தான் மாதவனின் ரசிகைகளை வியக்க வைத்துள்ளது.
இந்த ஆண்டின் சிறந்த நடிகர் யார்? சூப்பர்ஸ்டார் முதல் சூர்யா வரை.. டாப் 10 ஹீரோக்கள் பட்டியல்!

துப்பட்டாக்கள் பறக்க
சீ ஹாக்ஸ் உள்ளிட்ட இந்தி சீரியல்களில் நடித்து வந்த மாதவனை அலைபாயுதே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் இயக்குநர் மணிரத்னம். அந்த படத்திற்கு அப்போது இருந்த விமர்சகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுக்க, திரும்பவும் மும்பைக்கே கிளம்பி விடலாம் என எண்ணிய மாதவனை தியேட்டர்களில் துப்பட்டாக்களை பறக்க விட்டு இளம் பெண்கள் கொடுத்த வரவேற்பு உற்சாகப்படுத்தியது.

ட்ரீம் பாய்
சாக்லேட் பாய் என்றும் ட்ரீம் பாய் என்றும் மாதவனை சொல்லலாம். நவரச நாயகன் கார்த்தி போல மாப்பிள்ளை வேண்டும், கமல் போல மாப்பிள்ளை வேண்டும் என்று பார்த்திருந்தவர்கள், மாதவன் வருகைக்கு பிறகு மாதவன் போல மாப்பிள்ளையை தேட ஆரம்பித்து விட்டனர். வயதுக்கு வந்த மகன் இருந்தாலும், முடி நரைத்துப் போனாலும், ஏகப்பட்ட இளம் பெண்களின் கனவுக் கண்ணனாக இப்போதும் மாதவன் இருக்கிறார்.

மாதவனின் மாறா
சைலன்ஸ் திரைப்படத்தில் வில்லனாக மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்திய மாதவன், வரும் ஜனவரி 8ம் தேதி மாறா படத்தின் மூலம் மீண்டும் பெண் ரசிகைகளை வெகுவாக கவர காத்து இருக்கிறார். வலி மிகுந்த வாழ்க்கையில், வாழ எத்தனையோ வழிகள் இருக்கின்றன என்பதை ரொம்பவே ஈஸியாக சொல்லும் படமாகவே மாறா உருவாகி உள்ளது.

20 ஆண்டுகளாக க்ரஷ்
4 மாதங்களாக ஒருவர் மீது க்ரஷ் இருந்தால், அதற்கு பெயர் க்ரஷ் அல்ல, காதல் என நெட்டிசன் ஒருவர் பதிவிட்ட ட்வீட்டுக்கு கீழே, மாதவனின் ரசிகையான வெண்ணிலா என்பவர், எனக்கு 20 ஆண்டுகளாக நடிகர் மாதவன் மேல் க்ரஷ் இருக்கு என வேற லெவல் ரிப்ளை போட்டது வைரலாகி, மாதவனின் பார்வைக்கும் சென்றுள்ளது.

மாதவன் பதில் என்ன?
அந்த ரசிகையின் ட்வீட்டை பார்த்த மாதவன் வீட்டில் மனைவியிடம் அடி வாங்கக்கூடாது என்பதற்காக, உஷாராக "யப்பா" என போட்டு தப்பித்துக் கொண்டது செம வைரலாகி வருகிறது. வெண்ணிலாவுக்கே போட்டியாக டிடியில் ராஜ்கஹானி சீரியலில் இருந்தே நாங்க மாதவனின் க்ரஷ்ஷாக்கும் என இன்னொரு ரசிகையும் கமெண்ட் செய்துள்ளார்.

ரத்தன் டாட்டாவாக
விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு படத்தை ராக்கெட்ரி என்கிற பெயரில் இயக்கி நடித்து வருகிறார் மாதவன். மாறா படத்தை அடுத்து அந்த படம் ரிலீசாக காத்திருக்கிறது. இந்நிலையில், அடுத்ததாக ரத்தன் டாட்டாவின் பயோபிக்கில் மாதவன் நடிக்கப் போவதாக வெளியான ஃபேன் மேட் போஸ்டருக்கு இல்லை என மறுப்பு தெரிவித்து இருந்தார் மாதவன் என்பது குறிப்பிடத்தக்கது.