கிரேட் பிரதர்... கிரிக்கெட் வீரர் நடராஜனை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்.. ஏன் தெரியுமா?
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் வீரர் நடராஜனை பாராட்டி தள்ளியுள்ளார்.
Recommended Video
இந்திய கிரிக்கெட் அணியில் யாக்கர் கிங் என அழைக்கப்பட்டு வருபவர் தமிழக வீரர் நடராஜன். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியில் விளையாடிய நடராஜன் தனது யாக்கர் பந்து வீச்சால் கவனத்தை பெற்றார்.
இக்கட்டான சூழ்நிலைகளில் அவரது பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் டாப் ஆர்டர் பிளேயர்களே திக்குமுக்காடினர். இதனால் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்தார் நடராஜன்.

ஜாம்பவான்கள் பாராட்டு
சிட்னியில் இருந்து அவர் ஷேர் செய்த போட்டோக்கள் இணையத்தை தெறிக்கவிட்டன. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார் நடராஜன். இந்த மூன்று விதமான போட்டிகளிலும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் ஜாம்பவான் வீரர்களின் பாராட்டுக்களையும் அள்ளினார்.

சிறப்பான பர்ஃபாமன்ஸ்
எங்க ஊருப்பா இவரு.. என்று ஒவ்வொரு தமிழரும் மார்தட்டிக்கொள்ளும் வகையில் இருந்தது அவரது பர்ஃபாமன்ஸ். ஆஸ்திரேலியா சென்று திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அதன் பின் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து மற்றும் ஐபிஎல் தொடர்களில் நடராஜனால் விளையாட முடியாமல் போனது.

சொந்த ஊரில் கிரிக்கெட் மைதானம்
தற்போது காயத்திலிருந்து மீண்டுள்ள நடராஜன், மீண்டும் கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் அனைத்து வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி வருவதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

நடராஜன் கிரிக்கெட் கிரவுண்ட்
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது சொந்த ஊரில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு கிரிக்கெட் மைதானத்தை அமைக்க இருக்கிறேன். அந்த கிரிக்கெட் மைதானத்தின் பெயர் நடராஜன் கிரிக்கெட் கிரவுண்ட். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், முதல்முறையாக இந்திய அணியில் இடம்பெற்று விளையாடினேன்.

சிவகார்த்திகேயன் பாராட்டு
இந்த ஆண்டு டிசம்பரில் புதிய கிரிக்கெட் மைதானத்தை அமைக்கிறேன். கனவுகள் அனைத்தும் நிறைவேறி இருக்கின்றன. கடவுளுக்கு நன்றி" எனப் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனும் கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

பெரிய விஷயம் சகோதரா..
இதுதொடர்பான அவரது பதிவில், பெரிய விஷயம் சகோதரா... தொடருங்கள் என பதிவிட்டுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் கனா படத்தில் கிரிக்கெட் வீரராகவும் கிரிக்கெட் கோச்சாகவும் நடித்திருப்பார். இந்தப் படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











