56 வயசுல இப்படியொரு ஆபாச டான்ஸா?.. அஜய் தேவ்கன் வாயை எங்க வச்சிருக்காரு பாருங்க.. காண்டான ரசிகர்கள்!
சென்னை: பாலிவுட் முதல் கோலிவுட் வரை நடிகைகள் திருமணத்துக்குப் பிறகும் கவர்ச்சி நடனம் ஆடுவதில் அதிக ஆர்வத்தை காட்டி வருகின்றனர். ஒரு சில நடிகைகள் மட்டுமே கதைக்குத் தேவையான கதாபாத்திரங்களை ஏற்று கட்டுப்பாடுடன் நடித்து வருகின்றனர். திருமணமான நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிகர் அஜய் தேவ்கன் பாட்டுக்கு போட்ட குத்தாட்ட வீடியோ சோஷியல் மீடியாவில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
அஜய் தேவ்கன் நடிப்பில் அடுத்ததாக 'தே தே பியார் தே 2' எனும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், யோயோ ஹனி சிங் பாடலுக்கு அஜய் தேவ்கன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் இணைந்து ஆடிய குத்தாட்ட பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ஆனால், அதே அளவுக்கு அந்த பாடலை பார்த்த நெட்டிசன்கள் அஜய் தேவ்கனையும் ரகுல் ப்ரீத் சிங்கையும் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
தீபிகா முதல் தமன்னா வரை: பாலிவுட்டுக்குச் சென்றாலே தென்னிந்திய சினிமாவை விட அதிகளவில் நடிகைகள் ஆடைகளை குறைத்து படு கவர்ச்சியாக நடித்து வருகின்றனர். தீபிகா படுகோன் ஷாருக்கான், ஹ்ரித்திக் ரோஷன் படங்களில் எல்லாம் பிகினி உடையில் நடித்து உஷ்ணத்தை ஏற்றிய நிலையில், தமன்னா சமீபத்தில் ஷாருக்கான் மகனான ஆர்யான் கான் இயக்கிய பேட்ஸ் ஆஃப் பாலிவுட் வெப்சீரிஸில் உள்ளாடை தெரிய ஆபாசமாக ஆடியிருந்தார்.

திருமணத்துக்குப் பிறகு ரகுல் ப்ரீத் சிங்: நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் கடந்த ஆண்டு தமிழில் வெளியான அயலான், இந்தியன் 2 உள்ளிட்ட படங்கள் படுதோல்வியை தழுவின. ஆனால், இந்த படங்கள் எல்லாம் அவர் திருமணத்துக்கு முன்பே நடித்திருந்த படங்கள். தற்போது பாலிவுட்டில் அஜய் தேவ்கனுடன் திருமணத்துக்குப் பிறகு அவர் 'தே தே பியார் தே 2' படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அன்ஷுல் ஷர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜய் தேவ்கன், ரகுல் ப்ரீத் சிங், மாதவன், தபு உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் நடித்துள்ளனர். வரும் நவம்பர் 14ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
ரகுல் நெஞ்சில் சாய்ந்துக்கொண்டு: 56 வயதாகும் நடிகர் அஜய் தேவ்கன் ரகுல் ப்ரீத் சிங்கின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டு ரொம்பவே மோசமான நடன அசைவுகளை ஆடியிருக்கும் ஜூம் ஷராபி பாடல் வீடியோ வெளியான நிலையில், நெட்டிசன்கள் இந்த வயதில் இப்படி திருமணமான நடிகையுடன் ஆபாசமாக ஆடலாமா என கலாய்த்து வருகின்றனர். மேலும், அஜய் தேவ்கனின் மனைவி கஜோல் இதெல்லாம் பார்த்தால் வீட்டில் சண்டை தான் வெடிக்கும் என்றும் ரோஸ்ட் செய்து வருகின்றனர். சினிமாவில் இதெல்லாம் சகஜம் என்றும் அல்லு அர்ஜுன் ராஷ்மிகாவுடன் ஃபீலிங்ஸ் பாடலுக்கு ஆடவில்லையா என்று அஜய் தேவ்கன் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











