»   »  ஹீரோ .. ஹீரோ ..

ஹீரோ .. ஹீரோ ..

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஜீத்துக்கும், விஜய்க்கும் நிலவி வரும் "கோழிச் சண்டையை" முடிவுக்குக் கொண்டு வருவதற்காக விஜயகாந்த் தலைமையில் கட்டப்பஞ்சாயத்துக்கு ஏற்பாடாகியுள்ளதாம்.

"தல" என்று தீனா படத்தில் ஒரு வசனம் பேசப் போக அதைப் பிடித்துக் கொண்டு விஜய் படுத்திய பாட்டால் கொந்தளித்துப் போனார் அஜீத்.விஜய்யின் ஒவ்வொரு படத்திலும் அஜீத்தை சீண்டும் வகையில் வசனங்கள் இடம் பெற்றன.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்து பொங்கி எழுந்த அஜீத், விஜய்யை பகிரங்கமாகவே கண்டித்தார். சமீபத்தில் வெளியான அட்டகாசம்படத்தில் விஜய்யை மறைமுகமாக விமர்சித்து பாட்டும் (எனக்கொரு எதிரியாய் இருப்பதற்கு, உனக்கொரு தகுதியில்லை...)வசனங்களையும் வைத்தார். அத்தோடு நில்லாமல் எழுந்துட்டேன், இதோ வர்றேன் என்று விஜய்யை பார்த்து சொல்வது மாதிரிசவாலாகவும் பேசினார்.

ஆனால் அஜீத்தின் "பொங்கலை" விஜய் கண்டு கொள்ளவே இல்லை. பொங்கலுக்கு வெளியான திருப்பாச்சியிலும் அஜீத்தைக்கிண்டலடிக்கும் விதமாக, விரல்களால் சொடுக்குப் போட்டு சவால் என்று வசனம் வைத்தார்.

அஜீத்தின் குமுறல் மற்றும் விஜய்யின் மெளனத்தால் இவர்கள் இருவருக்கும் இடையேயான உள்நாட்டுப் போர் தீவிரமாகிக் கொண்டேவருகிறது. அண்மையில் சாலிகிராமத்தில் தன் ரசிகர் மன்றத்தினரை திரட்டி அஜீத் ஒரு கூட்டம் போட்டார்.

இதே பகுதியில்தான் விஜய்யின் தலைமை ரசிகர் மன்றம் இருக்கிறது. அன்று விஜய்க்கு எதிராக அஜீத் ரசிகர்கள் கோஷம் போட்டனர்.நல்லவேளையாக அங்கே விஜய் ரசிகர்கள் இல்லாததால் மோதல் இல்லாமல் போனது.

இந் நிலையில் இருவருக்கும் இடையே சமாதானம் செய்து வைக்குமாறு கேப்டன் விஜயகாந்த்தின் காதில் சிலர் ஓதியதாகத் தெரிகிறது.

மேலும், விஜய்யும் தனிப்பட்ட முறையில் விஜயகாந்த்தை சந்தித்து தனது தரப்பை விளக்கியுள்ளாராம்.

விஜய்யை தனிப்பட்ட முறையில் கேப்டனுக்குப் பிடிக்கும், ஆனால் அஜீத் மீது அவருக்கு காட்டம் உண்டு. நடிகர் சங்கம் நடத்தியசிங்கப்பூர், மலேசியா கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அஜீத் மறுத்ததை யாரும் மறந்திருக்க முடியாது.


காசு வேணுமா தந்துடறேன், ஆட மேடையில ஆட எல்லாம் வர மாட்டேன் என்பது அஜீத்தின் வழக்கமான டயலாக்.

இந் நிலையில் விஜய்யின் வேண்டுகோளின் பேரில் அஜீத்தையும், விஜய்யையும் உட்கார வைத்து விஜயகாந்த் சமாதானம் பேசப்போவதாக கூறப்படுகிறது. பஞ்சாயத்துக்கு விஜய் வந்தாலும் அஜீத் வருவாரா என்பது தெரியவில்லை.

அவர் தனது படங்களில் இப்போது பயங்கர பிஸியாக உள்ளார். லிங்குசாமி இயக்கத்தில் அஜீத் நடித்த ஜி படம் நாளை வெளியாகிறது.

இதையடுத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஆஷினுடன் அஜீத் நடிக்கும் காட்பாதர் படம் தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியாகஇருக்கிறது. அதற்குப் பிறகு பாலா, செல்வராகவன் படங்கள் என இந்த வருடம் முழுவதும் தனது கால்ஷீட் டைரியை நிரப்பி வைத்துள்ளார்.

முன்பெல்லாம் விளையாட்டுத் தனமாக படங்களை செலக்ட் செய்து வந்த அஜீத், இப்போது பெரிய இயக்குனர்களின் படங்கள் என்றால்மட்டுமே ஒத்துக் கொள்கிறார்.

இப்போது நடித்து வரும் காட்பாதர் படத்தில் கொடுமையால் அவதிப்படுகிறவர்களுக்கு ஆபத்பாந்தவராக உதவும் வேடம் அஜீத்துக்கு.கே.எஸ். ரவிக்குமார் படம் என்பதால் காதல், செண்டிமென்ட், ஆக்ஷன், காமெடி ஆகியவை சரிவிகிதத்தில் கலந்திருக்கிறதாம்.

ஏற்கனவே இந்த டீம் வில்லன் படத்தில் வெற்றி பெற்றதால், காட்பாதர் படத்திற்கும் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. முதன் முறையாக அஜீத் 3வேடங்களில் நடிக்கிறார்.

மூன்றுமே ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்கும் என்றும், படத்தில் ஆஷின் சிறப்பாக நடித்திருக்கிறார் என்றும் கே.எஸ்.ரவிக்குமார்கூறினார். (சந்திரமுகி வெளிவந்ததும் ரஜினியின் படத்தை இயக்கப் போகிறாராம்.. சொல்லிகிட்டே இருக்கார் கே.எஸ்)

ஏப்ரலில் அஜீத்தை வைத்து பாலா இயக்கும் படம் தொடங்குகிறது. இனிவரும் படங்களில் சிகரெட் பிடிப்பது போன்று நடிப்பதை அஜீத்தவிர்க்கப் போகிறாராம். காரணம் தனது ரசிகர்கள் அதை பின்பற்றுவார்கள் என்ற நல்லெண்ணமே.

சரி, திருமதி ஷாலினி அஜீத் என்ன பண்ணிட்டிருக்காங்க, தெரியுமா? தபால் மூலம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.காம். படித்துக்கொண்டிருக்கிறார்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil