»   »  இந்தியாவின் சில்வர்ஸ்டர் ஸ்டோலன்... கொண்டாடும் 'தல' ரசிகர்கள்

இந்தியாவின் சில்வர்ஸ்டர் ஸ்டோலன்... கொண்டாடும் 'தல' ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆஸ்திரியா நாட்டின் பத்ரிக்கை ஒன்று அஜித்தை 'இந்தியாவின் சில்வர்ஸ்டர் ஸ்டோலன்' என்று அடைமொழி கொடுத்து அழைத்து இதனை அவரது ரசிகர்கள் பெருமையுடன் பதிவிட்டு வருகின்றனர்.

அஜித் எந்த வித பிரச்சனைகளிலும் சிக்கமாட்டார். எப்போதும் படங்களில் மட்டுமே கவனம் செலுத்துவிட்டு சென்றுவிடுவார்.

அவரது ரசிகர்கள் இவரை அன்பாக தல என்று அழைத்து வருகின்றனர். ஆனால், அஜித்தே தனக்கு பட்டம் வேண்டாம் என்று நினைத்து தான் படத்தின் டைட்டில் கார்டில் கூட எந்த ஒரு பட்டத்தையும் போடுவது இல்லை.

அல்டிமேட் ஸ்டார்

சாக்லேட் பாய் தோற்றத்தில் அமராவதியில் அறிமுகமான அஜீத் ஆசை படத்தின் மூலம் இளம் பெண்களின் கனவு நாயகன் ஆனார். ஆரம்பம் படம் மூலம் அல்டிமேட் ஸ்டார் ஆக உயர்ந்தார்.

ரசிகர் மன்றம்

பொதுவாக அஜித்துக்கு பட்டம், பதவி, அடைமொழி என்பதில் எல்லாம் ஆர்வம் கிடையாது. இதற்காக தனக்கென்று இருந்து ரசிகர் மன்றங்களையெல்லாம் கலைத்தவர் அஜித்.

தல அஜீத்

தல அஜீத்

தீனா படத்தில் அடியாளாக நடித்த அஜித்தை அவரது ரசிகர்கள் இன்னமும்‘தல' என்று அடைமொழி வைத்துதான் அழைத்து வருகிறார்கள்.

இந்தியாவின் சில்வர்ஸ்டர் ஸ்டோலன்

இந்தியாவின் சில்வர்ஸ்டர் ஸ்டோலன்

இந்நிலையில், புதியதாக அஜித்துக்கு புதிய பட்டம் ஒன்று தானாக தேடி வந்திருக்கிறது. ஆஸ்திரியா நாட்டின் பத்ரிக்கை ஒன்று அஜித்துக்கு ‘இந்தியாவின் சில்வர்ஸ்டர் ஸ்டோலன்' என்ற பட்டத்தை கொடுத்து கவுரவித்துள்ளது.

ஆஸ்திரியாவில் தல 57

ஆஸ்திரியாவில் தல 57

தற்போது அஜித் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆஸ்திரியா நாட்டில் நடந்து வருகிறது. இது அஜித்குமாரின் 57வது படமாகும். இதில் சர்வதேச போலீஸ் அதிகாரி வேடத்தில் அஜித் நடிப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

டுவிட்டரில் காஜல்

டுவிட்டரில் காஜல்

காஜல் அகர்வாலும் இந்த படத்தில் நடித்தபோது எடுத்த சில படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இதை பார்த்ததும் டைரக்டர் சிவா கோபமடைந்து காஜல் அகர்வாலை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த படங்களை டுவிட்டரில் இருந்து காஜல் அகர்வால் நீக்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Reporting the news, a local newspaper in Austria called Ajith Kumar as Indian Sylvester Stallone. A die-hard Ajith Kumar fan shared the picture on Twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil