For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தல 60 அப்டேட்: மங்காத்தா ஸ்டைலில் மாஸ் காட்டப்போகும் அஜீத்

  |
  NKP Fight making Scene:Ajithதின் நல்ல மனசு யாருக்கு Sir வரும்

  சென்னை: அஜீத் குமார் நடிக்கும் 60ஆவது படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கப்போவதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. போனிகபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த படம் தீரன் அதிகாரம் ஒன்று படம் போல மாஸ் ஆக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே நேரத்தில் மங்காத்தா ஸ்டைலில் அசத்துவாரா அஜீத் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

  தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நேர்மையான காவல்துறை அதிகாரியின் கதையை படமாக எடுத்து பாராட்டுக்களை அள்ளியவர் எச். வினோத். அவரேதான் அஜீத் என்ற மாஸ் ஹீரோவை வைத்து பெண்கள் மீதான பாலியல் வன்முறையை மையமாக வைத்து நேர் கொண்ட பார்வை என்ற படத்தை இயக்கினார்.

  அஜீத் குமார் நடித்த நேர்கொண்ட பார்வை அவரது 59வது படமாகும். இது கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி வசூலை வாரிக்குவித்து வருகிறது. முந்தைய படங்களை விட இந்தப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்திருந்ததும் பொதுமக்களிடமும், அவருடைய ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

  நேர் கொண்ட பார்வை

  நேர் கொண்ட பார்வை

  பொதுவாக அஜீத் படங்களில் அவருக்கு பெரிதாக எந்த வசனமும் இருக்காது. அவருடைய மேனரிஸமும், சண்டைக் காட்சிகளுமே அதிக அளவில் இருக்கும். ஆனால் நேர்கொண்ட பார்வை படத்தில் முற்றிலும் மாறுபட்ட, தன்னுடைய திரையுலக வாழ்வில் இது வரையிலும் ஏற்றிராத வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

  கோர்ட் வசனங்கள்

  கோர்ட் வசனங்கள்

  வக்கீல் கதாபாத்திரம் என்றால், அதிக டயலாக் இருக்குமே, இவர் எப்படி பேசுவார், அப்படியே பேசினாலும், இவர் நீட்டி முழக்கி பேசும் வசனங்கள் ரசிகர்களிடம் எடுபடுமா என்றே ஆரம்பத்தில் நினைத்தனர். இதனால் அஜீத் நடித்த கோர்ட் சீன்கள் மிக ரகசியமாகவே இருந்தன. படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது கூட இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகம் இல்லை. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.

  மாஸ் ஹீரோ

  மாஸ் ஹீரோ

  தங்களின் மாஸ் ஹீரோ வக்கீலாக நடித்த படம் எப்படி இருக்குமோ என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி நேர்கொண்ட பார்வை உலகம் முழுவதும் வெளியானது. முதல் காட்சி பார்த்துவிட்டு வெளியான ரசிகர்கள் அஜீத்தை கொண்டாடி தீர்த்துவிட்டனர். எங்கள் தல வேற லெவல் என்று சல்யூட் வைத்தனர்.

  மனம் கவர்ந்த அஜீத்

  மனம் கவர்ந்த அஜீத்

  அஜீத் தோன்றும் முதல் சீனில், அவர் பேசும் ஆர் யு எ வர்ஜின் என்று குற்றவாளிக் கூண்டில் நிற்கும் பெண்களைப் பார்த்து கேட்கும்பொழுது, முகம் சுளித்த பெண்கள், தங்களுக்காக வாதாடி, இறுதியில் தங்களின் சார்பாக ‘நோ மீன்ஸ் நோ' என்பதற்கு அவர் கொடுக்கும் விளக்கம், தாங்களே கோர்ட்டில் வாதாடியதாக பெண்கள் நினைத்தனர். இந்தப் படத்திற்கு பின் பெண்கள் மனதில் ஆழமாக உட்கார்ந்து விட்டார் அஜீத்.

  தல அஜீத்

  தல அஜீத்

  தற்போது அஜீத் தனது 60ஆவது படத்திற்கு தயாராகிவிட்டார். இப்படத்தையும் தயாரிப்பது நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தான். அதே போல் படத்தை இயக்குவதும் எச்.வினோத் தான். அஜீத் நடிக்கும் 60ஆவது படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்டு 29ஆம் தேதி பூஜையுடன் ஆரம்பமாகிறது.

  காக்கிச்சட்டையில் அஜீத்

  காக்கிச்சட்டையில் அஜீத்

  ஆனால் அஜீத் என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. இந்தப்படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிக்கப்போகிறார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  அஜீத் லுக்

  அஜீத் லுக்

  அஜீத் ஏற்கனவே ஆஞ்சநேயா, மங்காத்தா மற்றும் என்னை அறிந்தால் ஆகிய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இவை இரண்டுமே செம ஹிட் படங்களாகும். அதிலும் மங்காத்தா படத்தில் சால்ட் அண்டு பெப்பர் லுக்கிலும், என்னை அறிந்தால் படத்தில் அதற்கு முற்றிலும் மாறுபட்டு ஃபிரஸ்ஸாக இளைமையான கேரக்டரிலும் நடித்திருந்தது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

  திரில்லர் படம்

  திரில்லர் படம்

  என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் தான் வில்லனாக வந்து மிரட்டினார். அதே போல் அஜீத்தின் 60ஆவது படத்திலும் அருண் விஜய் தான் அஜீத்துடன் மோதப்போகிறார். இந்தப்படமும் என்னை அறிந்தால் படம் போலவே திரில்லர் படமாக இருக்கக்கூடும் என்று அஜீத்தின் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

  Read more about: ajith அஜீத்
  English summary
  The film is rumored to be playing the role of a police officer in the 60th film starring Thala Ajit Kumar in the production of Bony Kapoor and directed by H.Vinoth.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X