»   »  அக்டோபர் 1-ம் தேதி அஜீத் பட டீசர்!

அக்டோபர் 1-ம் தேதி அஜீத் பட டீசர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் புதிய படத்தின் டீசர் வரும் அக்டோபர் 1-ம் தேதி வெளியாகிறது.

‘வீரம்' படத்தைத் தொடர்ந்து சிவாவும் அஜீத்தும் இணையும் இரண்டாவது படம் இது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார். மேலும் தங்கையாக லட்சுமி மேனனும், வில்லனாக கபீர் சிங்கும், காமெடியனாக சூரியும் நடித்து வருகிறார்கள்.

இத்தாலியில்..

இத்தாலியில்..

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இத்தாலியில் நடந்து வருகிறது. அங்கு அஜித்-ஸ்ருதி ஹாசன் சம்மந்தப்பட்ட பாடல் காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.

தீபாவளி ரிலீஸ்

தீபாவளி ரிலீஸ்

விறுவிறுப்பாக உருவாகி வரும் இப்படத்தை தீபாவளி அன்று வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்துடன் கமல் படமான தூங்கா நகரம் மோதும் என்கிறார்கள்.

டீசர்

டீசர்

இதற்கு முன்னதாக இப்படத்தின் டீசரை அக்டோபர் மாதம் 1ம் தேதியிலும், பாடல்களை அக்டோபர் மாதம் இறுதியிலும் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெயர் வைக்கவில்லை

பெயர் வைக்கவில்லை

இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். விரைவில் படத்தின் டைட்டிலை அறிவிக்கப் போவதாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கூறியுள்ளார்.

English summary
The teaser of Ajith's untitled movie will be launched on Oct 1, as sources revealed.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil