»   »  'தல' மெகா, வாவ், ஸ்டைலிஷ்: சொல்வது துல்கர் சல்மான்

'தல' மெகா, வாவ், ஸ்டைலிஷ்: சொல்வது துல்கர் சல்மான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் சார் மெகா, அவரை விவரிக்க வேறு வார்த்தை தேவை இல்லை என்று நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.

மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் மணிரத்னத்தின் ஓ.கே. கண்மணி படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் துல்கர் ட்விட்டரில் தனது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அதில் சில கேள்வி, பதில்கள் இதோ,

அஜீத்

அஜீத்

அஜீத் பற்றி கேட்டதற்கு துல்கர் கூறுகையில், அஜீத் சார் மெகா. அவரை விவரிக்க வேறு வார்த்தை தேவை இல்லை. அவர் அமேசிங், சூப்பர் ஸ்டைலிஷ் என்று துல்கர் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு

தெலுங்கு

தெலுங்கு படத்தில் எப்பொழுது நடிப்பீர்கள் என்று ஒருவர் கேட்டார். அதற்கு முதலில் நான் மொழியை கற்க வேண்டும். அப்போது தான் தெலுங்கு படத்தில் நடிக்க முடியும் என்கிறார் துல்கர்.

சூர்யா

சூர்யா

சூர்யா பற்றி கூறுங்களேன் என்று ரசிகர்கள் துல்கரிடம் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில், மிகவும் அர்ப்பணிப்புடன் வேலை செய்பவர், உண்மையான இன்ஸ்பிரேஷன்.

சென்னை பையன்

சென்னை பையன்

தமிழ் எப்படி நன்றாகத் தெரியும் என்று ஒருவர் கேட்டதற்கு துல்கர் கூறுகையில், நான் சென்னையில் உள்ள சிஷ்யா பள்ளியில் படித்தவன். நான் சென்னை பையனாக்கும் என்று பெருமையாக கூறியுள்ளார்.

English summary
Actor Dulquar Salman had a chat with his fans in twitter. When fans asked him about Ajith, he said that Ajith sir is mega ! You don't need any other word :)

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil