»   »  20 தமிழர்களை கொன்ற ஆந்திராவில் ஷூட்டிங் வேண்டாம்: அஜீத் அசத்தல்!

20 தமிழர்களை கொன்ற ஆந்திராவில் ஷூட்டிங் வேண்டாம்: அஜீத் அசத்தல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தல 56 படத்தில் காமெடியை தூக்கலாக வைக்குமாறு அஜீத் இயக்குனர் சிவாவிடம் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட ஆந்திராவில் படப்பிடிப்பை நடத்த வேண்டாம் என்று அவர் சிவாவிடம் வலியுறுத்தியுள்ளார்.

வீரம் படத்தை அடுத்து சிறுத்தை சிவா, அஜீத் மீண்டும் சேர்ந்து பணியாற்றும் படம் தல 56. படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் நடிக்கிறார். அஜீத்தின் பாசத்திற்குரிய தங்கையாக லக்ஷ்மி மேனன் நடித்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

காமெடி

காமெடி

படத்தில் காமெடியை சற்று தூக்கலாக வைக்குமாறு அஜீத் சிறுத்தை சிவாவிடம் தெரிவித்துள்ளாராம். இதையடுத்து சிவா படத்தில் கூடுதலாக மொட்டை ராஜேந்திரன் மற்றும் சுவாமிநாதன் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளார்.

ஆந்திரா

ஆந்திரா

தல 56 படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. அடுத்ததாக சில காட்சிகளை ஆந்திராவில் படமாக்க சிவா திட்டமிட்டிருக்கிறார். இது குறித்து அறிந்த அஜீத் 20 தமிழர்கள் கொல்லப்பட்ட ஆந்திராவில் படப்பிடிப்பு வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

கொல்கத்தா

கொல்கத்தா

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடக்க உள்ளது. அங்கு தான் படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்க உள்ளார்கள். அஜீத்துக்கு வில்லனாக கபீர் சிங் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்சி

டாக்சி

படத்தில் அஜீத் டாக்சி டிரைவராக வருகிறார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் ஸ்ருதி தான் டாக்சி டிரைவராக நடிக்கிறாராம். தல 56 தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Ajith has asked his Thala 56 director Siva to avoid shooting in Andhra where 20 tamils were killed.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil