இனி அஜித் போதும்....தல வேண்டாம்....அஜித் வைத்த புதிய கோரிக்கை

சென்னை : தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு பிறகு விஜய், அஜித் தான் டாப் ஸ்டார்களாக உள்ளனர். இவர்களுக்கு இருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள், தங்களின் ஃபேவரைட் ஸ்டார் தான் பெஸ்ட் என அடிக்கடி மோதிக் கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது.

அஜித், விஜய் இருவரும் நிஜத்தில் நல்ல நண்பர்களாக இருந்த போதிலும் அவரது ரசிகர்களின் மோதல்கள் இன்று வரை தொடர்ந்து வருகிறது. அஜித் பற்றி எந்த தகவல் வந்தாலும் அதை டிரெண்டிங் ஆக்குவதை எப்படி அவரின் ரசிகர்கள் வழக்கமாக வைத்துள்ளனரோ, அதே போல் டிரோல் செய்வதை விஜய் ரசிகர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஸ்டார்களின் அடைமொழி

ஸ்டார்களின் அடைமொழி

சினிமாவில் ஒவ்வொரு நடிகரின் பெயருக்கு முன்பும் ஒரு அடைமொழி வைத்து கூப்பிடுவது காலம் காலமாக இருந்து வருகிறது. அப்படி விஜய்க்கு இளைய தளபதி என்றும், அஜித்திற்கு அல்டிமேட் ஸ்டார் என்றும் அடைமொழி உண்டு. ஆனால் இந்த பெயர் இல்லாமல் அஜித்தை அவரது ரசிகர்கள் மட்டுமல்ல, திரையுலகை சேர்ந்த பலரும் செல்லமாக தல என்றே கூப்பிட்டு வருகின்றனர்.

தீனா படத்தில் துவங்கியது

தீனா படத்தில் துவங்கியது

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய தீனா படத்தில் ரவுடி கேரக்டரில் நடித்த அஜித்தை தல என கூப்பிடுவார்கள். அப்போதிருந்து அஜித்தை தல என்றே அனைவரும் கூப்பிட்டு வருகின்றனர். இதனால் காலப் போக்கில் மீடியாக்களும் அஜித், அஜித்குமார் என குறிப்பிடுவதை விட தல அஜித் என்றே குறிப்பிட துவங்கினர். திரையுலகை சேர்ந்த பலரும் அஜித்தை மரியாதையாக தல என்றே கூப்பிட்டு வருகின்றனர்.

தலன்னா அஜித்

தலன்னா அஜித்

சினிமாவில் அஜித், கிரிக்கெட்டில் தோனி ஆகிய இருவரை மட்டுமே அவர்களின் ரசிகர்கள் தல என செல்லமாக கூப்பிட்டு வருகின்றனர். இதுவே காலப் போக்கில் பெயராகி விட்ட நிலையில், தற்போது இனி தன்னை தல என யாரும் குறிப்பிட வேண்டாம் என அஜித் கேட்டுக் கொண்டுள்ளார்.

தல வேண்டாம்; அஜித் போதும்

தல வேண்டாம்; அஜித் போதும்

இது தொடர்பாக அஜித் சார்பில் அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு, இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற்பெயரான அஜித் குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.

பட்ட பெயர் வேண்டாம்

பட்ட பெயர் வேண்டாம்

தல என்றோ, வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

Valimai Villain திருமணத்திற்கு சென்ற Thala Ajith | Karthikeya weds Lohitha | Chiranjeeve
பாராட்டும் ரசிகர்கள்

பாராட்டும் ரசிகர்கள்

இந்த அறிக்கையை பார்த்த பலரும், இதனால் தான் அவரை அனைவருக்கும் பிடிக்கிறது. எளிமையான மனிதர் என சோஷியல் மீடியாவில் புகழ்ந்து வருகிறார்கள். அஜித்தின் தீவிர ரசிகர்களோ, நீங்க என்ன சொன்னாலும் எப்பவும் நீங்க எங்களுக்கு தல தான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X