»   »  பிறக்கும்போதே ஸ்டைலோடு பிறந்தவர் ரஜினி- அக்ஷய் குமார்

பிறக்கும்போதே ஸ்டைலோடு பிறந்தவர் ரஜினி- அக்ஷய் குமார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகர் ரஜினி மிகவும் ஸ்டைலான மனிதர் என நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்திருக்கிறார்.

இந்தி நடிகர் அக்ஷய் குமார் 2.ஓ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் 50% படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் அக்ஷய் குமார் சமீபத்திய பேட்டியொன்றில் ரஜினி மற்றும் ஷங்கர் இருவர் குறித்தும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். '' ஷங்கர் ஒரு இயக்குநர் கிடையாது அவர் ஒரு விஞ்ஞானியைப் போன்றவர்.

Akshay Kumar Talks about Rajini Style

ஒவ்வொரு படத்துக்கு முன்பும் மாதக்கணக்கில் ஆராய்ச்சி செய்தே அந்தப் படத்தை எடுக்கிறார். இயக்குநர் ஷங்கர் என்று கூறுவதை விட விஞ்ஞானி ஷங்கர் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.

ரஜினியைப் பொறுத்தவரையில் சினிமா மட்டுமல்லாது அவரது நிஜ வாழ்விலும் ஸ்டைல் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ரஜினி பிறக்கும்போதே ஸ்டைலோடு பிறந்தவர்'' என்று தெரிவித்திருக்கிறார்.

அக்ஷய் நடிப்பில் அடுத்ததாக 'ருஸ்தம்' திரைப்படம் வெளியாகவுள்ளது. இதில் கப்பற்படை அதிகாரியாக அவர் நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து 'ஜாலி எல்எல்பி' (மனிதன்) படத்தின் 2 வது பாகத்திலும் அக்ஷய் நடிக்கவிருக்கிறார்.

English summary
Akshay Kumar Talks about Rajini Style and Shankar Direction in Recent Interview.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil