»   »  ஜெய்ஹிந்த் கூறி டுவிட்டரில் இணைந்த அர்ஜூன்

ஜெய்ஹிந்த் கூறி டுவிட்டரில் இணைந்த அர்ஜூன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி, கமல் வரிசையில் நடிகர் அர்ஜுனும் ட்விட்டரில் இணைந்திருக்கிறார்.

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் இணைய நடிக, நடிகையர் பெருமளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 3 வருடங்களுக்கு முன் நடிகர் ரஜினி ட்விட்டரில் இணைந்தார்.

Arjun Joins Twitter

ரஜினியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் கடந்த ஜனவரி மாதம் தேசிய கீதம் பாடி ட்விட்டர் பக்கத்தில் இணைந்தார். சமீபத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், சசிகுமார் ஆகியோரும் இப்பக்கத்தில் இணைந்தனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் ஆக்ஷன் கிங் என்று புகழப்படும் நடிகர் அர்ஜுனும் ஜெய்ஹிந்த் எனக்கூறி ட்விட்டர் பக்கத்தில் இணைந்திருக்கிறார்.

அர்ஜுன் ட்விட்டர் பக்கத்தில் இணைந்ததை அறிந்த ரசிகர்கள் ஆர்வத்துடன் அவரைப் பின்தொடர ஆரம்பித்துள்ளனர். எனினும் அர்ஜுன் இதுவரை ஒரு ட்வீட் கூட செய்யவில்லை என்பது அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

இளம் நடிகர்கள் தங்களின் பட புரோமொஷனுக்கு சமூக வலைதளங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இளம் நடிகர்களுக்கு போட்டியாக மூத்த நடிகர்களும் சமூக வலைதளங்களில் ஆர்வம் காட்டுவது குறிப்பிடத்தக்கது.

English summary
Yesterday Actor Arjun Sarja Joins Twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil