»   »  அரவிந்த்சாமியின் முதல் இந்திப் படம் 'டியர் டாட்'!

அரவிந்த்சாமியின் முதல் இந்திப் படம் 'டியர் டாட்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ள அரவிந்த் சாமி, இப்போது படுபிஸியாகிவிட்டார்.

மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘தளபதி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அரவிந்த்சாமி. ‘ரோஜா', ‘பம்பாய்' உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர். ஒரு காலத்தில் இளம் பெண்களின் மனம் கவர்ந்த ஹீரோன்னா அது அரவிந்த்சாமிதான் எனும் அளவுக்கு இருந்தது. ஆனால் சாசனம் படத்துக்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார்.

Arvind Swamy's debut Hindi movie

நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘தனி ஒருவன்' படத்தில் வில்லனாக நடித்தார். ஹீரோவுக்கு இணையான வேடத்தில் கலக்கினார். இப்போது ஏகப்பட்ட வாய்ப்புகள். ‘தனி ஒருவன்' தெலுங்கு ரீமேக், ‘ஜெயம்' ரவியுடன் அடுத்து ‘போகன்' என ஏராளமான வாய்ப்புகள்.

இந்நிலையில், ஒரு நேரடி இந்தி படத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். அந்தப் படத்துக்கு டியர் டாட் என்று தலைப்பிட்டுள்ளனர்.

‘டியர் டாட்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்பபடத்தை அறிமுக இயக்குனர் தனுஜ் ப்ராமர் இயக்கவுள்ளார். அரவிந்த் சாமி நடித்த ‘ரோஜா', ‘பம்பாய்' ஆகிய படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டிருந்தாலும், அரவிந்த் சாமி நேரடியாக இந்திப் படத்தில் நடிப்பது இதுவே முதல் முறை.

English summary
Arvind Swamy's first Hindi Movie Dear Dad's first look has been released.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil