»   »  எப்படா இந்த ஃபைட் முடியும்னு எரிச்சலா இருக்கும்! - ஆர்யா

எப்படா இந்த ஃபைட் முடியும்னு எரிச்சலா இருக்கும்! - ஆர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சண்டைக் காட்சிகளில் நடிக்கும்போது எப்படா இந்த ஃபைட் முடியும்னு எரிச்சலா இருக்கும் என்றார் நடிகர் ஆர்யா.

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள படம் ' நையப்புடை'. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் முக்கிய நாயகனாக வேடமேற்று நடிக்க அவருடன் பா.விஜய்யும் இன்னொரு நாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. ஷோபா சந்திரசேகரன் குத்து விளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். நடிகர் ஆர்யா டீஸரை வெளியிட்டார்.

ஆர்யா

ஆர்யா

டீஸரை வெளியிட்டு நடிகர் ஆர்யா பேசும் போது, "நையப்புடை டீஸர் பார்த்து அசந்து விட்டேன். எஸ்.ஏ.சந்திரசேகரன் சார் ஒரு இயக்குநராக தயாரிப்பாளராக, எவ்வளவோ சாதித்து விட்டார். அவர் சாதிக்க வேண்டியது என்று எதுவுமே பாக்கியில்லை. அவர் என்னை இந்த விழாவுக்கு அழைத்த போது படம் பற்றி, கதை பற்றி, தயாரிப்பாளர் பற்றி எல்லாம் சரியாக அறிமுகப்படுத்தி விளக்கிப் பேசி விட்டுத்தான் அழைத்தார். அவர் வரச் சொன்னால் வரப் போகிறேன். ஆனால் அவர் அழைத்த விதம் அவ்வளவு முறையாக இருந்தது.

எப்போதும் அவரது உற்சாகம் என்னை ஆச்சரியப்பட வைக்கும். டீஸர் பார்க்கும் போது எஸ்.ஏ.சி சார் அழகாக சண்டை போட்டுள்ளார். பார்த்து அசந்து விட்டேன்.

சண்டைக் காட்சி

சண்டைக் காட்சி

எனக்கெல்லாம் சண்டைக் காட்சியில் நடிக்கும் போது எப்படா இந்த ஃபைட் முடியும் என்று நினைப்பேன். அந்த அளவுக்கு சண்டைக் காட்சியில் நடிக்கும்போது எரிச்சலாக இருக்கும். ஆனால் அவர் இதில் அவ்வளவு உற்சாகமாக சண்டை போட்டு இருக்கிறார். பாராட்டுக்கள்.

இவ்வளவு சாதித்து இருக்கிறார் இந்த வயதில் இவருக்கு ஏன் தேவையில்லாத வேலை என்று சிலர் நினைக்கலாம். அவரிடம் அந்தஅளவுக்கு சினிமா மீது ஆர்வம், ஈடுபாடு இருக்கிறது. அதனால்தான் இப்படிச் செய்ய முடிகிறது.

விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல்...

விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல்...

இவர் வயதில் நான் என்றால் சைக்கிள்தான் ஓட்டிக் கொண்டிருப்பேன். வீட்டில் கேட்பார்கள் இவன் ஏன் பைத்தியக்காரன் மாதிரி சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கிறான் என்று. எனக்குப் பிடித்தது, என்கூட இருப்பதுதான் வரும். இவர் மகன் ஒரு சூப்பர் ஸ்டார், இதற்குமேல் என்ன வேண்டும் என்று பலரும் பலவிதமாகப் பேசுவார்கள். இந்த வயதில் ஏன் இப்படி என்று நினைப்பார்கள். ஆனால் விமர்சனங்களைப்பற்றிக் கவலைப்படாமல் இருப்பார். அவரால் உழைக்காமல் இருக்க முடியாது.

ஆல்ரவுண்டர்

ஆல்ரவுண்டர்

பா.விஜய் ஆல்ரவுண்டர் எல்லாமும் செய்பவர். எனக்காக நிறைய பாடல்கள் எழுதியிருக்கிறார். அவர் சினிமாவைக் காதலிப்பவர். அவரும் இதில் நடித்திருக்கிறார். இந்தப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்," என்றார்.

இசையமைப்பாளர் தாஜ்நூர் பேசும் போது, "இந்தப் படத்தில் நிறைய கற்றுக் கொண்டேன்," என்றார்.

எம்எஸ் பாஸ்கர்

எம்எஸ் பாஸ்கர்

நடிகர் எம். எஸ். பாஸ்கர் பேசும் போது, "எனக்கு இந்தப்படத்தில் எல்லாக் காட்சியும் பிடிக்கும். ஒரு காட்சி மட்டும் பிடிக்காது. அது நான் எஸ்.ஏ.சி மாமாவை அடிக்கும் காட்சி .அதிலும் நடிக்க நான் மறுத்தேன். ஒழுங்கா உதைக்கலைன்னா நான் உதைப்பேன் என்று மிரட்டி நடிக்க வைத்தார்,'' என்றார்.

விஜய் கிரண்

விஜய் கிரண்

படத்தின் இயக்குநர் விஜயகிரண் பேசும் போது ,"எஸ்.ஏ.சி சார், பா.விஜய் சார் என இரண்டு பெரிய மனிதர்களை வைத்து இயக்கியது பெரிய விஷயம். வாய்ப்பு கொடுத்த தாணு சாருக்கு நன்றி,'' என்றார்.

ரஜினிமுருகன் பொன்ராம்

ரஜினிமுருகன் பொன்ராம்

'ரஜினி முருகன்' இயக்குநர் பொன்ராம்பேசும் போது, "நான் எஸ்.ஏ.சி சாரிடம் உதவியாளராக இருந்த போது அடி வாங்கியிருக்கிறேன். ஆனால் அதில் வலி இருக்காது. அப்பா, அம்மா அடிப்பது போல்தான் இருக்கும், ''என்றார்.

ஏ வெங்கடேஷ்

ஏ வெங்கடேஷ்

இயக்குநர் ஏ.வெங்கடேஷ் பேசும் போது 'நிலாவே வா' எனக்கு 3 வது படம். அதை எடுக்கும் முன்பு எஸ்.ஏ.சி சார் 'எத்தனை நாளில் எடுப்பாய்?' எத்தனை ரோலில் எடுப்பாய்? என்றார். 45 நாள் 50 ரோல் என்றேன். ஒரு நாள் அதிகமானாலும் அடிப்பேன் என்றார். அப்படி எடுத்த படம் அது,'' என்றார்.

பா விஜய்

பா விஜய்

கவிஞர் பா.விஜய் பேசும் போது, ''நான் ஒரு 'நறுக்' கவிதை எழுதினேன். 'உழைப்பு உன் அத்தியாயத்தில் முதல் வரியாக இருந்தால் உயரம் உன் வாழ்க்கையில் முகவரியாக இருக்கும்' என்று. அதற்கு முழு உதாரணமாக இருப்பவர் எஸ்.ஏ.சி சார் அவர் எனக்கு அப்பா மாதிரிதான்,'' என்றார்.

English summary
Actor Arya says that he never likes to perform in fight sequences in movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil