டிஎன்ஏ படத்துக்குப் பிறகு அசோக் செல்வனுடன் இணைந்த நிமிஷா சஜயன்.. வேறலெவல் கதையாமே!

சென்னை: அசோக் செல்வன் மற்றும் நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம், பூஜையுடன் படப்பிடிப்பை துவங்கியுள்ளது. மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் மற்றும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன.

அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்கும் இப்படத்தின் தொடக்க நிகழ்வில், நடிகர் சசிக்குமார் மற்றும் இயக்குநர் இரா. சரவணன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். படக்குழுவினருடன் இணைந்து, இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ், தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வருகிறது. 'குட் நைட்', 'லவ்வர்' மற்றும் இந்த ஆண்டு வெளியான 'டூரிஸ்ட் ஃபேமிலி' போன்ற பிளாக்பஸ்டர் படங்களுக்குப் பிறகு, இந்நிறுவனத்தின் ஆறாவது படைப்பாக இந்தப் புதிய படம் உருவாகிறது.

Ashok Selvan and Nimisha Sajayan new movie pooja happened photos goes trending

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். தற்போது தனுஷ் நடிக்கும் 'D54' (இயக்கம்: போர் தொழில் விக்னேஷ் ராஜா) மற்றும் நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' (இயக்கம்: சுந்தர் சி) போன்ற பிரம்மாண்டப் படங்களை தயாரித்து வருகிறது.

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் சார்பில் யுவராஜ் கணேசனும், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷும் இணைந்து அசோக் செல்வன் நடிக்கும் இந்தப் புதிய படத்தைத் தயாரிக்கின்றனர்.

நடிகர் அசோக் செல்வன், தனது ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த படத்திலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை நிமிஷா சஜயன் நடிக்கிறார்.

Ashok Selvan and Nimisha Sajayan new movie pooja happened photos goes trending

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ஹேப்பி எண்டிங்' மற்றும் 'ஒன்ஸ்மோர்' ஆகிய படங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று துவங்கி, ஒரே கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன், அனைத்து தரப்பினரையும் கவரும் வகையிலான கமர்ஷியல் திரைப்படமாக இதை உருவாக்குகிறார். திபு நினன் தாமஸ் இசையமைக்க, புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பரத் விக்ரமன் படத்தொகுப்பு பணிகளைக் கவனிக்கிறார்.

இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X