»   »  முன்னணியில் 'வெத்தலையைப் போட்டேண்டி'

முன்னணியில் 'வெத்தலையைப் போட்டேண்டி'

Subscribe to Oneindia Tamil
Ajith with Nayanatara
80களில் இருந்த இளசுகளை உசுப்பேத்திய வெத்தலையைப் போட்டேண்டி பாடல், ந்தக் கால இளசுகளையும் கலக்க ஆரம்பித்துள்ளது - ரீமிக்ஸ் வடிவில். யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியாகியுள்ள பில்லா படப் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன.

ரஜினியின் சூப்பர் ஹிட் படமான பில்லா ரீமேக் ஆகி அஜீத் நடிப்பில் வெளியாகவுள்ளது. இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவுள்ள பில்லா படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ஹிட் ஆகியுள்ளன. இதுவரை முதலிடத்தில் இருந்து வந்த ஏ.ஆர்.ரஹ்மானின் அழகிய தமிழ் மகனை பின்னுக்குத் தள்ளியுள்ளதாம் பில்லா படப் பாடல்கள்.

3 நாட்களுக்கு முன்பு பில்லா படப் பாடல்கள் வெளியாகின. முதல் நாளிலேயே 25 ஆயிரம் சிடிக்களும், கேசட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளதாம்.

சிவாஜிக்குப் பிறகு சமீபத்தில், ஆடியோ கேசட்டுக்கள் படு வேகமாக விற்று வரும் படம் பில்லா என்பது கேசட் கடைக்காரர்களின் கருத்து.

இந்த செய்தியால் அஜீத் குஷியாகியுள்ளார். அவர் மட்டுமல்லாமல் யுவன் ஷங்கர் ராஜாவும் சந்தோஷமாகியுள்ளார். காரணம், தீபாவளிக்கு வெளியான 3 படங்களில் அவரது இசைதான். ஆனால் அந்தப் படங்களில் இடம் பெற்ற பாடல்களில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை பெரிய அளவில் பேசப்படவில்லை.

ஆனால் பில்லா படத்திற்கு அவர் இசையமைத்துள்ள பாடல்கள் ஹிட் ஆகி விட்டன. குறிப்பாக மை நேம் இஸ் பில்லா, வெத்தலையைப் போட்டேண்டி ஆகிய இரு ரீமிக்ஸ் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன.

பில்லா ஆடியோ விற்பனை குறித்து அதை வெளியிட்டுள்ள அய்ங்கரண் ஆடியோஸ் நிறுவனம் கூறுகையில், இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மிகப் பெரிய அளவில் விற்பனை நடந்து வருகிறது.

முதல் கட்டமாக வெளியிட்ட சிடிக்களும், கேசட்டுக்களும் விற்று விட்டதால் அடுத்து புதிதாக 15 ஆயிரம் சிடிக்கள் மற்றும் கேசட்டுக்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளோம்.

அழகிய தமிழ் மகனை பில்லா 2வது இடத்திற்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil