»   »  துபாயில் வீடு வாங்குவது ரொம்ப வசதி..பாலிவுட் நடிகர் அனில் கபூர்

துபாயில் வீடு வாங்குவது ரொம்ப வசதி..பாலிவுட் நடிகர் அனில் கபூர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஷாரூக்கான், ஐஸ்வர்யா ராயைத் தொடர்ந்து பாலிவுட் நடிகர் அனில் கபூர் புதிதாக அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றினை துபாயில் வாங்கியிருக்கிறார்.

பாலிவுட் நடிகர்களில் ஒருவரான அனில் கபூர் துபாயில் 2 படுக்கையறைகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றினை சமீபத்தில் வாங்கியுள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது "சொத்துக்களில் முதலீடு செய்ய இதுதான் சரியான சமயம் என்று எண்ணுகிறேன். தன்யூப் நிறுவனம் வழங்கும் கட்டணத் திட்டம் மிகவும் வசதியாக இருக்கிறது.

Bollywood Actor Anil Kapoor buys home in Dubai

இதனால் ஒரு வீடு வாங்குவதற்கு நாம் நிறைய சிரமப்பட வேண்டியதில்லை. மேலும் துபாயை என்னுடைய 2 வது வீடாக நான் கருதுகிறேன். அதனால் இங்கே நிறைய சொத்துகளை வாங்கவும் திட்டமிட்டு இருக்கிறேன்" என்று அனில் கபூர் தெரிவித்திருக்கிறார்.

அனில் கபூர் தற்போது வெளிநாட்டில் பிரபலமாக ஒளிபரப்பு ஆகி வரும் "24" என்ற அமெரிக்க தொலைக்காட்சி தொடரின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார்.

இந்தத் தொலைகாட்சி தொடரில் அவர் முன்னணி வேடம் ஒன்றினை ஏற்று நடித்து வருகிறார். இது குறித்து அவர் கூறும்போது "இதில் நடிப்பது ஒரே நேரத்தில் 8 படங்களில் நடிப்பது போன்ற உணர்வை எனக்கு அளிக்கிறது.

மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் எனக்கு மிகுந்த சவாலை இந்தத் தொடர் அளிக்கிறது. இதற்குப் பின் மாடர்ன் பேமிலி என்ற பெயரில் ஒரு தொடரை எடுக்கவிருக்கிறேன்.

இதற்காக 2 தம்பதிகளிடம் தற்போது பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. உறுதியானவுடன் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறினார்.

சூர்யா நடித்து வரும் '24' படத்திற்கு தன்னுடைய தொலைக்காட்சித் தொடரின் பெயரை வைத்தததால், படக்குழுவினர் மீது வழக்குப் போடவிருப்பதாக அனில் கபூர் முன்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.

English summary
After Shah Rukh Khan and Aishwarya Rai Bachchan now Actor Anil kapoor bought homes in Dubai.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil