»   »  கோபிகாவை நாடும் சேரன்

கோபிகாவை நாடும் சேரன்

Subscribe to Oneindia Tamil

மீண்டும் கோபிகாவை நாடியுள்ளாராம் சேரன். சேரன், சமீபத்தில் மாயக்கண்ணாடி மூலம் பெரும் சரிவைச் சந்தித்தார். இதையடுத்து தனது திறமையை மீண்டும் நிரூபிக்க ஆட்டோகிராப் படத்தின் 2ம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார்.

முதல் பாகத்தில் மொத்தம் நான்கு நாயகிகள் இருந்தனர். மல்லிகா, கோபிகா, சினேகா, கெஸ்ட் ரோலில் கனிகா என நான்கு பேருடன் நடித்திருந்தார் சேரன்.

ஆனால் 2ம் பாகத்தில் 2 பேர் மட்டுமே இருப்பார்களாம். கோபிகாவும், கனிகாவும் வருவது போல கதையை உருவாக்கியுள்ளாராம் சேரன். 2ம் பாகத்தில் நடிக்க வேண்டும் என கோபிகாவை அணுகியுள்ளாராம்.

ஆனால் கோபிகா தரப்பிலிருந்து இன்னும் பதில் வரவில்லையாம். வரும் என்ற நம்பிக்கை சேரனுக்கு உள்ளதாம்.

கோபிகா இப்போது வீராப்பு படத்தில் சுந்தர்.சிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். முதல் பாகத்தைப் போலவே 2ம் பாகமும் சூப்பர் ஹிட் ஆகும் என்று நம்புகிறார் சேரன்.

மாயக்கணணாடியில் தத்துவங்களை சொல்லிப் பார்த்த சேரன் அது எடுபடாமல் போகவே மீண்டும் கண்ணீர் கதைக்குத் தாவுகிறார் போலும்.

கண்ணாடிதான் கவிழ்த்து விட்டது. கண்ணீராவது கை கொடுக்கட்டும

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil