»   »  சிவாஜி நடித்த படத்தை ரீமேக் பண்ண தில் இருக்கா... - கேட்கிறார் சேரன்!

சிவாஜி நடித்த படத்தை ரீமேக் பண்ண தில் இருக்கா... - கேட்கிறார் சேரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
பில்லா, மாப்பிள்ளை போன்ற படங்களை ரீமேக் செய்கிறார்கள் இன்றைக்கு. அவர்களுக்கு தில் இருந்தால் சிவாஜி நடித்த ஏதாவது ஒரு படத்தையாவது ரீமேக் பண்ணி நடிக்க முடியுமா?, என்று கேள்வி எழுப்பினார் இயக்குநர் சேரன்.

சிவாஜி நடித்த கர்ணன் படத்தை நவீன முறையில் மெருகேற்றி ரிலீஸ் செய்கிறது திவ்யா பிலிம்ஸ் நிறுவனம்.

இந்த மெருகேற்றப்பட்ட கர்ணன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடந்தது.

நிகழ்ச்சியில் சண்முக சுந்தரம், டிகே ராமமூர்த்தி, டிஎம் சௌந்தரராஜன், பிபி ஸ்ரீனிவாஸ், பி சுசீலா ஆகியோர் பங்கேற்றனர். சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரும் விழாவில் பங்கேற்றார்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இயக்குநர் சேரன் பேசுகையில், "இன்றைய நடிகர்கள் பில்லா, மாப்பிள்ளை என்று பழைய படங்களை ரீமேக் செய்கிறார்கள். அவர்களுக்கு தில் இருந்தால் சிவாஜி நடித்த ஏதாவது ஒரு படத்தையாவது ரீமேக் பண்ணி நடிக்க முடியுமா?

சிவாஜி நடித்த உத்தமபுத்திரன் ஹாலிவுட் தொழில்நுட்பத்திற்கு நிகரான படம். ஹாலிவுட் ரேஞ்சிற்கு படம் எடுக்கிறோம் என்று சொல்கிறார்களே, சிவாஜி கணேசன் படம் அளவிற்கு யாராவது முயற்சியாவது செய்ய முடியுமா. சிவாஜி சிகரெட் பிடிக்கும் போது விடும் புகைக் கூட ஒரு விதமான நடிப்பாகத்தான் இருக்கும்.

படங்களில் அவருடைய அழகை பிரதிபலிக்க போட்ட மேக்கப் எந்த ஹாலிவுட் கலைஞரால் போடப்பட்டது. எல்லாமே இங்கிருப்பவர்கள் செய்ததுதான். நான் ஒரு தீவிர சிவாஜி ரசிகன். இளம் வயதில் எல்லோரும் சிகிரெட் பிடிக்கத்தான் தீப்பெட்டி வைத்திருப்பார்கள். ஆனால் நான் என் தலைவன் சிவாஜி படத்திற்கு உள்ளங்கையில் சூடம் ஏற்றுவதற்காகத்தான் தீப்பெட்டி வைத்திருப்பேன்," என்றெல்லாம் அடித்துவிட்டார்.

Please Wait while comments are loading...