இங்கே பொன்னியின் செல்வன்.. அங்கே ராஜமெளலி படம்.. அடுத்த லெவலுக்கு செல்லும் சியான் விக்ரம்!

சென்னை: இயக்குநர் ஷங்கரின் அந்நியன், ஐ உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களில் நடித்த சியான் விக்ரம் தொடர்ந்து அதே ரூட்டில் பயணித்து வருகிறார்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.

இந்நிலையில், அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குநர் ராஜமெளலியின் படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிப்பின் உச்சம்

நடிப்பின் உச்சம்

உடலை வருத்தி நடிக்கும் நடிகர்கள் இந்திய சினிமாவிலேயே விரல் விட்டு எண்ணும் அளவுக்குத் தான் உள்ளனர். தமிழ் சினிமாவிலேயே ஹாலிவுட் அளவுக்கு இறங்கி நடிக்கும் ஹீரோவாக பல முறை ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளார் சியான் விக்ரம். சேது, காசி, பிதாமகன், அந்நியன், ஐ என அதுக்கும் மேல சொல்லிக் கொண்டே போகலாம்.

இறுதிக்கட்டத்தில் கோப்ரா

இறுதிக்கட்டத்தில் கோப்ரா

அந்த வரிசையில் கோப்ரா படத்திலும் பல வித கெட்டப்புகளை போட்டு ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு தசாவதராம் கமல் போல மாறியுள்ளார் சியான் விக்ரம். கடந்த ஆண்டே வெளியாகும் என எதிர்பார்த்த அந்த திரைப்படம் கொரோனா காரணமாக இறுதி கட்ட படப்பிடிப்பை முடிக்க முடியாமல் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், கொரோனா மற்றும் தயாரிப்பு தரப்பு பிரச்சனைகள் முடிந்து இறுதிகட்ட படப்பிடிப்புக்கு கோப்ரா ரெடியாகி உள்ளது.

ஆதித்த கரிகாலனாக விக்ரம்

ஆதித்த கரிகாலனாக விக்ரம்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் உடன் ராவணன் படத்தில் நடித்த சியான் விக்ரம் மீண்டும் அதே கூட்டணியில் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார். ஒட்டுமொத்த படத்தையும் தாங்கும் முக்கிய கதாபாத்திரமான ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

ராஜமெளலி படம்

ராஜமெளலி படம்

கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம் என கைவசம் 4 படங்கள் உள்ள நிலையில், அடுத்ததாக இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த படத்தில் சியான் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மகேஷ்பாபுவுக்கு வில்லன்

மகேஷ்பாபுவுக்கு வில்லன்

தமிழில் ஹீரோவாக கலக்கி வரும் சியான் விக்ரம் பான் இந்திய படமாக உருவாக உள்ள ராஜமெளலியின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆர்.ஆர்.ஆர் படம் வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக மகேஷ் பாபுவின் படத்தை இயக்கப் போகிறார் ராஜமெளலி. அந்த படத்தில் தான் மகேஷ் பாபுவுக்கு மிரட்டல் வில்லனாக சியான் விக்ரமை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

என்ன கதை

என்ன கதை

பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் என பிரம்மாண்ட படங்களை இயக்கி வரும் இயக்குநர் ராஜமெளலி அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து என்ன மாதிரியான படத்தை இயக்கப் போகிறார் என்கிற கேள்வி ஒட்டுமொத்த திரையுலகினர் மத்தியிலும் எழுந்துள்ளது. சியான் விக்ரமும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், ஜேம்ஸ் பாண்ட் படம் போல இந்த படம் உருவாகும் என தகவல்கள் கசிந்துள்ளன. அதிகாரப்பூர்வ அப்டேட் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகு என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X