ஆந்தாலஜியில் குக் விக் கோமாளி அஸ்வின்…டைட்டில் என்ன தெரியுமா?

சென்னை : குக் வித் கோமாளி அஸ்வின் நானி தயாரிப்பில் உருவாகி ஆந்தாலஜியில் ஹீரோவாக நடித்துள்ளார்.

5 கதைகள் கொண்ட ஆந்தாலஜி திரைப்படத்திற்கு 'மீட் க்யூட்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆந்தாலஜியை அறிமுக இயக்குநர் தீப்தி கன்டா இயக்கி உள்ளார்.

குக்வித் கோமாளி

குக்வித் கோமாளி

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் குக் வித் கோமாளிக்கு மக்களிடையே தனி இடம் உண்டு. புகழ் செய்யும் சேட்டைகளை பார்க்கவே ஒரு கூட்டம் இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் பிரபலமாகிவிட்டார்கள். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஸ்வின் சும்மா ஸ்மார்ட்டாக இருப்பார். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளிக்கு நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு ஏராளமான ரசிகைகளை பெற்றார்.

என்ன சொல்ல போகிறாய்

என்ன சொல்ல போகிறாய்

இளம் ரசிகைகளின் கனவு நாயகனாக மாறிய அஸ்வின் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு 'என்ன சொல்ல போகிறாய்'படம் மூலம் நடிகர் அஷ்வின் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தை ஹரிஹரன் இயக்குகிறார். குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் காமெடியில் கலக்கிய புகழும் இதில் நடிக்கிறார். விவேக்,மெர்வின் இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இப்படத்தை தயாரிக்கிறார்.

அஸ்வின் நாயகனாக

அஸ்வின் நாயகனாக

தற்போது, அஸ்வின் நானியில் தயாரிப்பில் வெளியாக உள்ள ஆந்தாலஜி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த, தகவலை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, தெலுங்கில் 'மீட் க்யூட்' ஆந்தாலஜி மூலமாக அறிமுகமாகிறேன். இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகர்

தெலுங்கில் முன்னணி நடிகர்

ஈ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையில் தெரிந்த முகமானவர் நானி. இவர், தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். டக் ஜெகதீஷ், ஷ்யாம் சின்கா ராய், அண்டே சுந்தரானிகி உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் 'டக் ஜெகதீஷ்' திரைப்படம் அனைத்துக்கட்ட பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

Recommended Video

Ashwin படத்தில் நடிக்கும் Avantika Mishra யார்? | Enna Solla Pogirai, Shades of Kadhal
மீட் க்யூட்

மீட் க்யூட்

நானி ஒரு நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இவருடைய தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே வித்தியாசமான கதைக்களங்கள் கொண்டவை. தற்போது நானி 'மீட் க்யூட்' என்ற ஆந்தாலஜியைத் தயாரித்து வருகிறார். 5 கதைகள் கொண்ட ஆந்தாலஜியை அறிமுக இயக்குநர் தீப்தி கன்டா இயக்கி வருகிறார்.

முன்னணி நடிகர்கள்

முன்னணி நடிகர்கள்

இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் அஸ்வின் மட்டுமன்றி சத்யராஜ், ரோகிணி, ஆதா ஷர்மா, வர்ஷா பொல்லாமா, அகன்ஷா சிங், சுனைனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வசந்த்குமார் ஒளிப்பதிவு செய்கிறார், விஜய் புல்கானின் இசை அமைத்துள்ளார். அவினாஷ் கொல்லா மற்றும் கேரி பிஹெச் முறையே கலை மற்றும் எடிட்டிங் பணிகளை கவனித்து வந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X