Coolie Day 19 Box Office: தொடரும் கோடி ரூபாய் வசூல்.. உலகளவில் கூலி படத்தின் மொத்த வசூல் இவ்வளவா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகரித்த நிலையில், திங்கட்கிழமை மீண்டும் வசூல் குறையத் தொடங்கி விட்டது. கல்யாணி பிரியதர்ஷனின் லோகா படம் வசூலில் தாண்டவமாடுகிறது. மோகன்லாலின் ஹிருதயப்பூர்வம், பகத் ஃபாசில், கல்யாணி பிரியதர்ஷன் நடித்த ஓடும் குதிரை சாடும் குதிரை உள்ளிட்ட படங்கள் ஓணம் பாக்ஸ் ஆபிஸில் பெரியதாக ஷைன் ஆகவில்லை.
ஜான்வி கபூர், சித்தார்த் மல்கோத்ரா நடித்த பரம் சுந்தரி படமும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் தொடர்ந்து கோடி ரூபாய் வசூலை 19வது நாளிலும் குறையாமல் பார்த்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் திங்கட்கிழமையான நேற்றாவது கூலி படத்தின் ஒட்டுமொத்த வசூலை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், இன்னமும் அமைதியாகவே உள்ளது தான் ஆச்சர்யம்.
கூலி 19வது நாள் வசூல்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 74 வயதில் திரையில் தோன்றினாலே படத்தை பார்க்க ரசிகர்கள் ரெடியாகி விடுகின்றனர். லோகேஷ் கனகராஜின் கதை சொதப்பலாக இருப்பதாக பலரும் விமர்சித்தாலும், எடுத்துக் கொண்ட கதையை விஷுவலாக நேர்த்தியாக அவர் இயக்கிய நிலையில் தான் 3வது வாரம் தாண்டி படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்கின்றனர். கூலி படம் ஞாயிற்றுக்கிழமை இந்தியளவில் 3.1 கோடி வசூல் செய்த நிலையில், திங்கட்கிழமையான நேற்று இந்தியா முழுவதும் அதிகபட்சமாக 1.10 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சாக்னிக் வெப்சைட் அறிவித்துள்ளது. புதிய படங்களே முதல் நாளில் 1 கோடி ரூபாய் வசூல் செய்ய தடுமாறி வரும் நிலையில், 19வது நாளிலும் ரஜினிகாந்தின் படம் 1 கோடிக்கு மேல் அதிகமாக வசூல் செய்வது சிறப்பான விஷயம் என்றே பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
500 கோடி கிளப்: இந்தியாவில் கடந்த 19 நாட்களில் கூலி திரைப்படம் ஒட்டுமொத்தமாக 280.20 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் கிட்டத்தட்ட 180 கோடி ரூபாய் வசூலை ஓவர்சீஸில் கூலி படம் அள்ளியிருப்பதாக தகவல் தெரிவித்த நிலையில், இதுவரை உலகளவில் கூலி திரைப்படம் 507 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக கூலி படம் 500 கோடி கிளப்பில் இணைந்ததாக அறிவிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











