»   »  கீச்சிடாமல் அடக்கி வாசிக்கவே நினைத்தேன், ஆனால்...: கமல் கோபம்

கீச்சிடாமல் அடக்கி வாசிக்கவே நினைத்தேன், ஆனால்...: கமல் கோபம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இனி மக்கள் நீதி நாடுகாக்கும். நான் கீச்சிடாமல் அடிநாதத்துடன் அடக்கி வாசிக்கவே நினைத்தேன். ஆனால் எம் இயக்கப் பொறுப்பாளரின் கைது பேச வைக்கிறது என கமல் ஹாஸன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் சூழல் குறித்து ட்விட்டரில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் உலக நாயகன் கமல் ஹாஸனை பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி சுயதம்பட்ட முட்டாள் என இரண்டு முறை ட்வீட்டியுள்ளார்.

இந்நிலையில் கமல் ட்விட்டரில் இன்று கூறியிருப்பதாவது,

கீச்சிடாமல்

இனி மக்கள் நீதி நாடுகாக்கும். நான் கீச்சிடாமல் அடிநாதத்துடன் அடக்கி வாசிக்கவே நினைத்தேன். ஆனால் எம் இயக்கப் பொறுப்பாளரின் கைது பேசவைக்கிறது

கைது

TN ஜ.கட்டுப் போராட்டத்தில் எமதியக்கத்தின் சுதாகரும் சிலரும் நேற்று கைது இது எமதுபெருமையைக் கூட்டவும் அரசியல் வன்மத்தைக் காட்டவும் செய்கிறது

அளந்து பேசவும்

நமதியக்கத்தார் சற்றதிகமாக கண்ணியம் காக்கும் நேரமிது. அளந்து பேசவும் தொடர்ந்து பேசவும். அரசுகள் மாறிமாறிவரினும் நம் கட்சியற்ற கொள்கைமாறாது

வருவர் போவர்

எக்கட்சி அரசேற்றாலும் நம் பணி போதுநலம் காப்பதே. இக்கூலியில்லா வேலையை நம் ஆயுளுள்வரை செய்வோம். அவர் பலமுறை வருவா் போவர்.நிரந்தரம் நம்நாடு'

English summary
Kamal Haasan said in twitter that he decided no to tweet any more but the arrest of his Iyakkam member has made him speak on social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil