»   »  தனு வெட்ஸ் மனு 3... கங்கணாவுடன் ஜோடி சேர்கிறார் தனுஷ்?

தனு வெட்ஸ் மனு 3... கங்கணாவுடன் ஜோடி சேர்கிறார் தனுஷ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஆனந்த் ராய் இயக்கத்தில் தனு வெட்ஸ் மனு 3ம் பாகத்தில் நடிகர் தனுஷும், கங்கணா ரணாவத்தும் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாதவன் கங்கணா ரணாவத் ஜோடி சேர்ந்து நடித்த வெற்றிப்படம் தனு வெட்ஸ் மனு. தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் ரிலீசாகியுள்ளது.

இந்நிலையில், இப்படங்களின் இயக்குநர் ஆனந்த் ராய் , தனு வெட்ஸ் மனுவின் மூன்றாம் பாகத்தை இயக்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

‘தனு’வாக தனுஷ்...

‘தனு’வாக தனுஷ்...

மூன்றாம் பாகத்தில் நாயகனாக மாதவனிற்குப் பதிலாக தனுஷ் நடிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாயகன் மாறினாலும் நாயகியாக கங்கணாவே நடிப்பார் எனக் கூறப்படுகிறது.

ராஞ்சனா...

ராஞ்சனா...

ஏற்கனவே, ஆனந்த் ராய் இயக்கத்தில் ராஞ்சனா என்ற இந்திப்படத்தில் நடித்திருந்தார் தனுஷ். இந்தியில் தனுஷின் முதல்படம் அது என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஆனந்த் ராய்...

மீண்டும் ஆனந்த் ராய்...

ராஞ்சனாவைத் தொடர்ந்து அமிதாப் மற்றும் அக்‌ஷரா ஹாசனுடன் சேர்ந்து ஷமிதாப் படத்தில் தனுஷ் நடித்திருந்தார். இந்நிலையில், சமீபத்தில் மீண்டும் ஆனந்த் ராய் இயக்கத்தில் இந்திப் படமொன்றில் நடிக்க இருப்பதாக அறிவித்திருந்தார் தனுஷ்.

அழுத்தமான காதல் கதை...

அழுத்தமான காதல் கதை...

இப்புதிய படம் குறித்து பேசிய தனுஷ், ‘நான் நடித்ததிலேயே இந்த படம் தான் மிக அழுத்தமான காதல் கதையாக இருக்கும். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கும்' எனத் தெரிவித்திருந்தார்.

தனு வெட்ஸ் மனு 3...

தனு வெட்ஸ் மனு 3...

தனு வெட்ஸ் மனு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், அப்படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்க ஆனந்த் ராய் இயக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. எனவே, தனுஷ், ஆனந்த் ராயுடன் மீண்டும் கூட்டணி சேரும் படம் தனு வெட்ஸ் மனுவின் மூன்றாம் பாகமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

English summary
'Tanu Weds Manu Returns' director Anand L. Rai, who cast Dhanush in his directorial 'Ranjhanaa', may cast him in 'Tanu Weds Manu 3' opposite Kangana Ranaut.
Please Wait while comments are loading...