அப்பாவின் ஜன நாயகன் படத்துக்கு போட்டியாக வெளியாகிறதா ஜேசன் சஞ்சய் படம்?.. துல்கர் நடிச்சிருந்தா?
சென்னை: நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் சந்தீப் கிஷன் நடித்து வரும் நிலையில், கிட்டத்தட்ட படம் இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஜன நாயகன் படத்துக்கு போட்டியாக வெளியாகுமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
அப்பாவின் தயவே இல்லாமல் தனது படத்தை உருவாக்கி வருகிறார் ஜேசன் சஞ்சய் என சினிமா வட்டாரத்தில் ஏகப்பட்ட பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், அப்பாவுக்கு போட்டியாக படத்தை இறக்குவாரா? என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.

இந்நிலையில், முதலில் இந்த படத்தில் துல்கர் சல்மானை நடிக்க வைக்கத்தான் ஜேசன் சஞ்சய் திட்டமிட்டு இருந்தார் என்கிற தகவல்களும் கசிந்துள்ளன.
ஜேசன் சஞ்சய் படம்: லைகா தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படம் கிட்டத்தட்ட ரெடியாகி விட்டது என்கின்றனர். சமீபத்தில், இறுதிகட்ட படப்பிடிப்புக்காக ஜேசன் சஞ்சய் ஹைதராபாத்துக்கு சென்ற விமான நிலைய வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகின. கவின், விஜய் சேதுபதி உள்ளிட்ட பெயர்கள் ஆரம்பத்தில் அடிபட்ட நிலையில், கடைசியாக சந்தீப் கிஷனை வைத்து ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்தை இயக்கி வருகிறார்.
நோ சொன்ன துல்கர் சல்மான்: முதலில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது. முன்னதாக, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது. துல்கர் சல்மான் மட்டும் ஓகே சொல்லியிருந்தால், ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்தை மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கியிருப்பார். ஆனால், கால்ஷீட் இல்லாத காரணத்தால் துல்கர் சல்மான் நோ சொல்லிவிட்டார்.
பல படங்களுக்கு நோ: துல்கர் சல்மான் மணிரத்னம் இயக்கத்தில் உருவான கமல்ஹாசனின் 'தக் லைஃப்' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், கடைசி நேரத்தில், அந்த படத்தில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாகத்தான் படத்தில் சிம்பு இணைந்து நடித்தார். ஆனால், அந்த படம் ஃபிளாப் ஆகிவிட்டது. மேலும், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் சூர்யா மற்றும் துல்கர் சல்மான் நடிக்க வேண்டியது, கடைசியில் இருவரும் விலக, சிவகார்த்திகேயன் மற்றும் ரவி மோகன் அந்த படத்தில் இணைந்தனர். துல்கர் சல்மானுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு தான் அவரால் பல படங்களை ஒப்பந்தம் செய்ய முடியாமல் போனது என அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

அப்பாவுடன் மோதுவாரா?: விஜய் மற்றும் சங்கீதா இருவரும் இணைந்து வாழ்வது இல்லை என்றும் அப்பா விஜய் மீது மகன் சஞ்சய் கோபத்தில் உள்ளார் என்றும் ஏகப்பட்ட பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் அடிபட்டு வரும் நிலையில், ஜன நாயகன் படத்துக்குப் போட்டியாக பொங்கலுக்கு ஜேசன் சஞ்சய் தனது படத்தை வெளியிட திட்டமிட்டு உழைத்து வருகிறார் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது. துல்கர் சல்மான் மட்டும் நடித்திருந்தால், ஜன நாயகன் மற்றும் பராசக்தி என இரு படங்களுக்கும் எதிரான படத்தை ஜேசன் சஞ்சய் இறக்கியிருப்பார் என்கின்றனர். சந்தீப் கிஷனுக்கு கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் நல்ல மார்க்கெட் உள்ள நிலையில், சரியான நேரத்தை பார்த்து ஜேசன் சஞ்சய் படத்தை லைகா வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











