Don't Miss!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- News
ஈபிஎஸ் முறையீடு ஏற்பு.. ஜன.30ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை.. முக்கிய உத்தரவு உண்டா? ஏன் முக்கியம்
- Technology
ஜியோவுடன் இணைந்து திருப்பதி தேவஸ்தானம் அறிமுகம் செய்த புதிய ஆப்.! எதற்குத் தெரியுமா?
- Finance
கூகுள் ஊழியரின் கண்ணீர்..பிரசவ அறை,4கை குழந்தை, தாய் மரணம்,இண்டர்வியூவ்-க்கு மத்தியில் பணிநீக்கம்..!
- Sports
என்ன தெரிகிறது அங்கு??.. போட்டியின் போது அம்பயர் எராஸ்மஸ் செய்த காரியம்.. இணையத்தில் சிரிப்பலை!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த வழிகளில் பணம் சம்பாதிப்பவர்கள் வாழும்போதே நரகத்தை அனுபவிப்பார்களாம்...!
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய புதிய ஹூண்டாய் ஐ10... விலை இவ்ளோதானா! மாருதி, டாடா கார்களின் கதையை முடிக்க போகுது!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
விஜய் – அஜித் இடையே போட்டி இல்லையா...யார் சொன்னது?...செம மோதல் காத்திருக்காம்
சென்னை : விஜய், அஜித் ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் மோதிக் கொள்ளும் போதெல்லாம் அவர்கள் இருவரும் நண்பர்கள், ரசிகர்கள் தான் மோதிக் கொள்கிறார்கள் என்றார்கள். ஆனால் விஜய் - அஜித் இடையே செம மோதல் ஒன்று காத்திருக்கிறதாம்.
ஆரம்ப காலத்தில் விஜய், அஜித் இணைந்து ராஜாவின் பார்வையிலேயே படத்தில் நடித்தனர். அதற்கு பிறகு இவர்களின் காம்போ இணையவில்லை. இருவரும் தனித்தனியாக வளர்ந்து இன்று தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்கள் ஆகி விட்டனர். விஜய் - அஜித்தை மீண்டும் இணைத்து மங்காத்தா 2 படத்தை எடுக்க போவதாக டைரக்டர் வெங்கட் பிரபு கூறி வருகிறார்.
விக்னேஷ் சிவன் கதை சொல்லும்போது தூங்கிட்டேன்.. விஜய் சேதுபதிக்கே இந்த நிலைமையா!

ஷுட்டிங்கில் பிஸியான அஜித்
அஜித் தற்போது ஐதராபாத்தில் நடக்கும் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். அஜித்தை தவிர இந்த படத்தில் நடிப்பவர்கள் யாரும் உறுதி செய்யப்படவில்லை. இதற்கிடையில் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்க போவதாக கூறுகிறார்கள். வங்கி கொள்ளையை மையமாகக் கொண்ட இந்த படத்தில் ஏற்கனவே சொல்லப்பட்டது போல் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவில்லை. இரண்டு லுக்குகளில் தான் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

இப்போ வரை சந்திக்கலியே
இதே போல் ஐதராபாத்தில் தான் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் ஷுட்டிங்கும் நடந்து வருகிறது. இதில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், யோகிபாபு ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது. அஜித் , விஜய் நடிக்கும் படங்களின் ஷுட்டிங் ஐதராபாத்தில் நடப்பதால் அங்கு இருவரும் சந்தித்துக் கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்பட்டதாலும் இந்த இரு ஸ்டார்களின் சந்திப்பு நடக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது வரை அப்படி எந்த தகவலும் வரவில்லை.

அட இப்படி ஒரு மோதலா
ஆனால் விஜய்யின் தளபதி 66 படம் மற்றும் அஜித்தின் ஏகே 61 படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்டும் மிக விரைவில் வர போகிறதாம். இது இரு படங்களின் டைட்டிலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் யாருடைய படத்தின் அப்டேட் முதலில் வர போகிறது, என்ன அப்டேட் வர போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

ஒரே சமயத்தில் மோதல்
பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரே சமயத்தில் விஜய், அஜித்தின் படங்கள் மோதிக் கொள்ள போகின்றனவாம். ஆனால் ரிலீசில் கிடையாது. அஜித் படம் மட்டும் தான் இந்த ஆண்டு தீபாவளிக்கு வர உள்ளதாகவும், விஜய்யின் தளபதி 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு தான் ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்கிறார்கள். அதே சமயம் தளபதி 66, ஏகே 61 படங்களின் அப்டேட்கள் ஒரே சமயத்தில் வந்து, போட்டி போட போவதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் உள்ளனர்.