என் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்பாதீர்கள்! - அம்பரீஷ்
பெங்களூர்: எனது உடல்நிலை குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று, நடிகரும், கர்நாடக வீட்டு வசதித் துறை அமைச்சருமான அம்பரீஷ் தெரிவித்தார்.
கடந்த மாதம் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் சிங்கப்பூர் எலிசபெத் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்று வந்தார் அம்பரீஷ்.

மே 2-ம் தேதி மைசூரில் சாமுண்டீஸ்வரி கோயிலில் நடந்த தனது நண்பர் ரஜினியின் லிங்கா பட பூஜையிலும் பங்கேற்றார்.
பின்னர் உதகையில் திங்கள்கிழமை தனது குடும்பத்துடன் தங்கியிருந்த அம்பரீஷுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால், கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "சிங்கப்பூர் சிகிச்சைக்குப் பிறகு முழு உடல் நலத்துடன் உள்ளேன்.
அவ்வப்பொழுது சாதாரண உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்தன் அடிப்படையிலே மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தேன். நான் ஆரோக்கியமாக உள்ளேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











